பெருங்காயம் -பெருங்காயமே இல்லை

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை
அன்புள்ள மக்களே,
பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும்  என்று நாம் கேள்விப் பட்டிருப்போம்.  ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?
 அந்த கூட்டு பெருங்காயம் …

 இந்த கூட்டு பெருங்காயம் …

 அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம்  இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு.  ஆனால் இது அந்த கூட்டு அல்ல.  இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக்  கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும்.
இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை.   என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம். 
 அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?

ஒரு வகையான அராபிய பிசின் 60%, 

மைதா 30%, 

பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10% 
இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம்.  இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!! இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா?  அது தான் இல்லை.  “பெருங்காய டப்பாக்களின்  மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால்  நாம்தான் கவனிப்பதில்லை”-என்று படித்ததும் வியப்பாக இருந்தது. சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன்.  அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ……

இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்?
வயிறு புண்ணாகும்….

வயிற்றில்  வாயு அதிகமாகும் ..
நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..

மயக்கம் வரும் …

பால்காயம் என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தருமாம்.

Leave a Reply