பெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்!

அழகை அதிகரிக்கும் முகமூடி
யாரும் கொள்ளைக்காரர்கள் என பயந்துவிட வேண்டாம். இது முக அழகை அதிகரிக்க உதவும் முகமூடி. இது முகத்தின் தசை பயிற்சிக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. என்றும் இளமையாக இருப்பதற்காக இதை பயன்படுத்துகிறார்கள். இதன் வேலையே தசைகளின் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து இறுக்கமாக்குவது தான். இதன் விலை $23 டாலர்கள். இதன் பெயர் – Facewaver Exercise Mask.
மூக்கை நேராக்குவதற்கு…
இது ஓர் கிளிப் போன்ற வடிவில் இருக்கிறது. மூக்கை நேராக அறுவை சிகிச்சை மேற்கொள்ள தயங்குபவர்கள் இதை பயன்படுத்தலாம் என கூறுகிறார்கள்,. இதன் பெயர் ஹானா ட்சன் நோஸ் ஸ்ட்ரெய்ட்னர். பார்க்க வலி ஏற்படுத்தும் வகையில் இருப்பது போல காட்சியளித்தாலும், இது பயன்படுத்தும் போது அவ்வளவு வலி தவறுவதில்லை என பயன்படுத்துபவர்கள் கூறுகிறார்கள்.இதன் விலை $43 டாலர்கள்.
அழகாக சிரிக்க பயிற்சி
சிரிக்கும் போது வாய் அழகாக மற்றும் சுருக்கம் இன்றி காட்சியளிக்க இதை பயன்படுத்துகிறார்கள்.இது பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்ட கருவி ஆகும். இது, முகத்தின் தசைகள் இறுக்குமாவதற்கும் உதவுகிறதாம். இதன் விலை $56 டாலர்கள். இதன் பெயர் Face Slimmer Exercise Mouthpiece.
அழகாக முகத்தை அகலப்படுத்த…
இதை வாயில் பொருத்தி, இரு காதுகளில் மாட்டிக்கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, முகத்தின் சுருக்கத்தை போக்க உதவுவதாக பயன்பாட்டாளர்கள் கருதுகிறார்கள். இதன் பெயர் Bigan Beauty Face Expander, விலை $89 டாலர்கள்.
நாக்கு பயிற்சிக்கு…
நாக்கிற்கு பயிற்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவி, முக தசைகளை இறுக்கமாக வைத்துக்கொள்வதற்கும் பயன்படுகிறதாம். இதை வாயில் மாட்டிக்கொண்டு நாவிற்கு பயிற்சி அளித்தல் வேண்டும். இதன் விலை $51 டாலர்கள், பெயர் – Kuwate Sukkiri Tongue Exerciser.

tamil.adaderana.

Leave a Reply