புல் வகைகள்

சதுரக்கள்ளி:

 • கரப்பான், நமைச்சல், கபநோய், கமுக்கடி, வாத நோய் ஆகியவற்றை நீக்கும். விரோசனத்தை தரும்.

நாகதானிக்கள்ளி:

 • தாவர விஷம், மற்ற விஷம், வாத ரோகம் இவைகளை போக்கும்.

பேய்க்கற்றாழை:

 • அதிக நீரும், உடல் எரிச்சலும், சுரமும் குறையும்.

செங்கற்றாழை:

 • உடலின் உட்சூட்டை குறைக்கும். இரும்பை தங்கமாக்கும்.

கற்றாழை:

 • இதை குமரி என்றும் கூறுவர். வாதமேகம், கபமேகம், கிருமிகள், பெருவியாதி, மூலம், உள்மாந்தம், வயிற்று நோய், பித்தம் ஆகியவற்றை போக்கும்.

கள்ளி முளையான்:

 • புளிப்பு சுவையுள்ள கள்ளிமுளையான் தீபனத்தை உண்டாக்கும். வாத குணத்தையும், பித்த கோளாறுகளையும் மாற்றும்.

மேகநாதப்பூண்டு:

 • இரத்த பித்தத்தையும், விஷங்களையும், ரோகத்தையும் போக்கும்.

அருகம்புல்:

 • திரிதோஷம், கோழை, கண் நோய், சிரஸ்தாபம், தும்பிரம நோய், இரத்த பித்தம், மருந்து சூடு ஆகியவற்றை போக்கும். அறிவு வளரும்.

சோதிப்புல்:

 • விழிக்காசப்படலம், கருவிழி நோய், நீர்ப்பில்லம், வெண் புள்ளி, உடல் கூச்சம் ஆகியவை அகலும்.

தர்ப்பைப்புல்:

 • சப்ததோஷம், அற்ப வீரியம், கபம், சுரம், நமைச்சல் ஆகியவை குறையும். யாகங்களுக்கும் உபயோகமாகும்.

மாந்தப்புல்:

 • மலப்பேதி, அக்கினி மந்தம், அஜீரணம், சுரம் ஆகியவைகளை போக்கும்.

காவட்டம் புல்:

 • கண மாந்தம், அதிசாரம், காய்ச்சல் ஆகியவை குறையும்.

பீசைப்புல்:

 • அனைத்து விதமான மாந்தம், நாசிரோகம், மூலம், தோஷம், பித்தம் ஆகியவை குறையும்.

வாசனை புல்:

 • வாத பித்த ரோகம், சுரம், கோழை, ருசியின்மை ஆகியவற்றை போக்கும். பசியின்மை குறைந்து பசியை ஏற்படுத்தும்.

பேய்ப்புல்:

 • மலையில் முளைக்கின்ற பேய்ப்புல்லுக்கு மார்பு நோய், எலி விஷம், வாய்வு, வாய்வு குத்தல் ஆகியவற்றை நீக்கும்.

பருங்காளான்:

 • விரணமும், தாகமும் நீங்கும். குடல் விருத்தி, விக்கல் ரோகம், பித்த கோபம், வாதம், கண் புகைச்சல் ஆகியவற்றை உண்டாக்கும்.

இவை அனைத்தும் புல்லின் பல வகைகள் மற்றும் அவற்றின் மருத்துவ குணங்கள் ஆகும். இதன் மருத்துவ குணங்களை அறிந்து பயன்படுத்தி பயன் பெறுவோம்.

Leave a Reply