புல்லட் ரயிலை நிறுத்திய பாம்பு

பாம்பு ஒன்று ஓடும் புல்லட் ரயிலை நிறுத்தியது என்றால் நம்பமுடிகிறதா? ஆம் உண்மைதான்.

ஜப்பானில் அதிவேக புல்லட் ரயில்கள் ஓடுவது நாம் அறிந்ததே, டோக்யோ புல்லட் ரயில் ஒன்றில் பயணிகள் கை வைக்கும் Armrest ஒன்றில் பாம்பு ஒன்று இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பயணி ஒருவர்.

ரயிலில் பாம்பு இருந்ததை ரயில் ஓட்டுநருக்கு தெரியப்படுத்தியதால் அருகிலிருந்த Hamamatsu நிலையத்தில் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

சம்பவம் குறித்து ரயில் ஓட்டுநர் தெரிவித்தபோது, பாம்பு இருந்ததை அறியாத பயணி பாம்புடனேயே 50 நிமிடங்களாக பயணித்து வந்துள்ளார், எனினும் யாருக்கும் எந்த காயமும் பாம்பினால் ஏற்படவில்லை என்றும், அது ஒரு வகையான மலைப்பாம்பு என்ரும் தெரிவித்தார்.

பின்னர் ரயில்வே காவல்துறையினர் வந்து பாம்பினை கைப்பற்றிச் சென்றனர். ரயிலும் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு சென்று சேர்ந்தது.

இப்படியும் சம்பவங்கள் நடக்குது.. பார்த்து பத்திரமாக செல்லுங்கோ பயணிகளே!

News 7

Leave a Reply