பாத்திரங்களின் பாத்திரங்கள்

நம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரம். அதில் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் நாம் சமைக்கும் பாத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்கள்தான்.
மண்பாண்ட பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவு வகைகள் கூடுதல் சுவை தருவதோடு ஆரோக்கியம் மிகுந்ததாகக் கருதப்படுவதால் நீண்ட ஆயுளைத் தருகிறது. எளிதில் செரிமானம் ஆகும் நீண்ட நேரம் கெடாது.
வெள்ளிப் பாத்திரத்தில் பரிமாறப்படும் உணவு உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். பித்தம் வாதம் கபம் மூன்றையும் சமப்படுத்தும்.
பித்தளைப் பாத்திரத்தில் வைக்கப்படும் உணவுகள் வயிறு தொடர்பான பிரச்னையை ஏற்படுத்தாது. அல்சரைக் குணப்படுத்தும்.
செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் ஆஸ்துமா குணமாகும் சளி தொந்தரவை ஏற்படுத்தாது.
இரும்புப் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவுகள் ரத்தவிருத்தியை அதிகரிக்கும். உடல் சூட்டைத் தணிக்கும்.கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்னும் சொல்வடைக்கு ஏற்ப வாதம் பித்தம் கபம் போக்கி உடலை இரும்பு போல் வைக்கும்.

ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் வாசனை ஊரைக் கூட்டும். ஜீரணச் சக்தியை அதிகரிக்கும்.
நன்றி என் சாந்தினி மதுரை

Leave a Reply