பறவை எச்சம்!

பொருளாதாரத்தை உயர்த்திய பறவை எச்சம்!

பறவைகள் எச்சம், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியுமா? முடியும் என நிரூபித்து இருக்கிறது, நவ்று என்ற குட்டி நாடு. ஆஸ்திரேலியா – சிட்னியில் இருந்து, 4,000 கி.மீ., தொலைவில், 12 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ள, இந்நாட்டின் மக்கள் தொகை, 10 ஆயிரம் மட்டுமே! தண்ணீரால் சூழப்பட்ட இந்நாட்டிற்கு, லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. இப்பறவைகள் வெளியேற்றும் எச்சம், பூமியில் கலந்து அருமையான உரமாகி விடுகிறது. இந்த மண்ணை, மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால், பெரும் பொருள் ஈட்டலாம் என்று நினைத்து, பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று, 1968ல் மண் ஏற்றுமதியை துவக்கியது. இதனால், நவ்று நாட்டு மக்களின் வருவாய் பெருமளவில் உயர்ந்து, வாழ்க்கை வசதிகள் அதிகரித்து விட்டன.

dinamalar

Leave a Reply