பப்பாளி பால்

பப்பாளி பால் எடுக்கும் தொழிலும் சூடுபிடித்துள்ளது. பால் எடுப்பதில் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் மூலம் பப்பாளி பால் எடுக்கப்படுகிறது. இதற்கு குறைவான மூலதனமே போதுமானது. ஒவ்வொரு பப்பாளி மரத்தின் காய்களின் மீது இரவு நேரத்தில் குச்சியால் கீறி விட்டு அதன் அடியில் ரப்பர் சீட்டை வைத்துவிடுவோம். பின்னர் இரவு முழுவதும் காயில் இருந்து வடியும் பால், ரப்பர் சீட்டில் பாலாடைக் கட்டிபோலத் தேங்கி இருக்கும். அதனை மறுநாள் அதிகாலையில், மொத்தமாகச் சேகரித்து வைப்போம்.
விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ பப்பாளி பால் 150 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. பப்பாளி மரங்கள் 20 மாதங்கள் வரை காய்க்கும் திறனுள்ளது. இதிலிருந்து ஒரு ஏக்கர் பப்பாளியில் ஆண்டுக்கு ஒரு டன் வீதம் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
பப்பாளிக் காய்களில் பால் எடுக்கும் முறை:
• பப்பாளிக் காய்களில் இருந்து பால் எடுக்க, முதிர்ந்த காய்களில் 2 முதல் 3 இடங்களில் லேசாகக் கீறல் ஏற்படுத்தி, பாலை வடிக்க வேண்டும்.
• அதிகாலை முதல், காலை 10 மணி வரை, 3 அல்லது 4 நாள்களுக்கு ஒருமுறை பால் எடுக்கலாம்.
• பப்பாளிப் பாலை அலுமினியப் பாத்திரம் அல்லது ரெக்ஸின், பாலிதீன் தாள்களில் சேகரிக்கலாம்.
• பாலை சூரிய ஒளி அல்லது 40 டிகிரி சென்டிகிரேடில் செயற்கை உலர் கருவிகளில் உலர்த்தலாம்.
• உலர்த்தத் தாமதம் ஆனால் தரம் பாதிக்கப்படும்.
• ஒரு ஹெக்டேருக்கு 3 ஆயிரம் முதல் 3,750 கிலோ வரை பப்பாளி பால் கிடைக்கும்.
பப்பாளிப் பழங்களைவிட பப்பாளிக் காய்களில் இருந்து எடுக்கப்படும் பாலுக்கு நல்ல விலை கிடைக்கிறது.
• ஓசூர், பெங்களூர் பகுதிகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல விலை கொடுத்து வாங்குகின்றன.

Leave a Reply