பனை நார் கட்டில்

பச்சை பனை ஓலையை வெட்டி ..அதன் மட்டையிலிருந்து உரித்து எடுக்கப்பட்ட நாரை ..நீரில் ஊற வைத்து …பின்னப்பட்ட கட்டில் …முன்பெல்லாம் பல வீடுகளில் காணமுடிந்தது …ஆறு மாதத்திற்கு ஒரு முறை புது நார் பின்னவேண்டும் …இவற்றின் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் மூட்டை பூச்சியை தேடி கொன்ற காலம் உண்டு .

இன்று ..இவற்றை பின்ன தெரிந்தவர்களும் அதிகம் இல்லை …பயன்படுத்த விரும்புபவர்களும் அதிகம் இல்லை …..கயிற்று கட்டிலை போலவே ..காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பிடித்து விட்டது …….

Leave a Reply