பத்மஸ்ரீவிருது பெறும் முதல் பெண் டாக்டர்

சிறந்த சேவை புரியும் குடிமக்களுக்கான பத்மஸ்ரீ விருதுகள் பெறுவோரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில் 91 வயது பெண் டாக்டர் பக்தி யாதவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர். இவர் அங்கு ஆஸ்பத்திரி நடத்தி 68 ஆண்டுகளாக இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார். ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்துள்ளார். தற்போது 91 வயதாகும் நிலையிலும் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்புடன் வந்து இலவச சிகிச்சையை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அவரது சேவையை பாராட்டி அவரை கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்த விருதை அளித்துள்ளது. இதன் மூலம் பத்மஸ்ரீவிருது பெறும் முதல் பெண் டாக்டர் என்ற பெருமையையும் பெறுகிறார்.

 

Leave a Reply