பதவிஏற்றதும் ஆரம்பமாகின அராஜகம்

 அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்ட அடுத்த நாளே, மன்னார்குடிசொந்தங்கள், தங்களின் மிரட்டல் வேலைகளை ஆரம்பித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.
 மின் வாரிய டெண்டர்களை, ஆதரவாளர்களுக்கு கொடுக்கும்படி, அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்து உள் ளனர். சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று, டெண்டர் படிவம் சமர்ப்பிக்க, மற்ற ஒப்பந்ததாரர்களை போலீசார் அனுமதிக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மன்னார்குடி சொந்தங்கள் தலையீட்டால், ஏற்கனவே திட்டமிட்டபடி மின் வாரிய ஊழியர்கள் நியமனத்துக்கான நேர்காணல் நடக்கவில்லை. வெளிப்படையாக நடக்க விரு ந்த இந்த நேர்காணல் நிறுத்தப்பட்டதால், அதற் காக விண்ணப்பித்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள் ளனர். இதைத் தொடர்ந்து, அவர்கள், டெண்டர் பணிகளில் தலையிடத் துவங்கி உள்ள தாக, மின் வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, நீலகிரி மாவட்டம், குந்தா; கோவை, காடம்பாறை; ஈரோடு, நெல்லை ஆகிய இடங்களில், நீர் மின் உற்பத்தி வட்டங் கள் உள்ளன. இவற்றில், மின் வாரியத்துக்கு, 38 அணைகள் உள்ளன. மழை சீசனின் போது, அணைகளில் தண்ணீர் தேக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப் படுகிறது. அணைகள் கட்டப்பட்டு, பல ஆண்டுகள் ஆவதால் சேதமடைந்துள்ளன.
இதையடுத்து,அவற்றை உலக வங்கி நிதியுதவியுடன் புனரமைக்க, மின் வாரியம் முடிவு செய்தது. முதல் கட்டமாக, 20 அணை களை புனரமைக்க, மின் வாரியத்துக்கு, 260 கோடி ரூபாய் கடன் வழங்க, உலக வங்கி ஒப்பு தல் அளித்தது. அதில், 16 அணைகளில், புனர மைப்பு பணி முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், நீலகிரியில் உள்ள குந்தா பாலம் அணை துார்வாருதல் மற்றும் பராமரிப்பு பணிக்கு, மின் வாரியம் நவம்பரில் தனித்தனி யாக டெண்டர் கோரியது. அவற்றின் மதிப்பு முறையே, 26 கோடி மற்றும் நான்கு கோடி ரூபாய். டெண்டர் விண்ணப்ப படிவம் வழங்க,
நேற்று கடைசி நாள்.

இதனால், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் இருந்து, பல ஒப்பந்ததாரர்கள், டெண்டர் படிவம் வழங்க வந்தனர். அவர்களும், உடன் வந்தவர் களும், சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நுழைய முயன்றனர்; ஆனால், போலீசார் அனுமதிக்கவில்லை. அவர்கள்

கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அனு மதித்தனர். இதனால், நேற்று மதியம் வரை, மின் வாரியத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வாறு ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது:
குந்தா பாலம் பணிக்கான டெண்டர் தேதி, டிச., 21 என, முதலில் குறிப்பிடப்பட்டது. பின், மன்னார்குடி சொந்தங்கள் குறுக்கீடுகளால் தேதி நீட்டிக்கப்பட்டது; படிவத்தை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.குந்தா பாலம் அணை துார்வாரும் பணியை, சேகர் ரெட்டி ஆதரவாள ருக்கு வழங்கும்படி, அதிகாரிகளுக்கு நெருக்கடி தருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அணைகள் புனரமைப்பு பணிக்காக டெண்டர் கள், உலக வங்கி விதிகளின் படி வெளிப்படை யாக நடக்கின்றன; அதிக நிறுவனங்கள் பங்கேற்றால் தான், குறைந்த விலை புள்ளி கிடைக்கும்; அதற்காகவே, டெண்டர் தேதி நீட் டிக்கப்பட்டது.முதல் முறையாக, குந்தா பாலம் அணை துார்வாரும் பணிக்கு, ஏழு; புனரமைப்பு பணிக்கு, மூன்று என, மொத்தம், 10 நிறுவனங் கள் பங்கேற்றுள்ளன.

அவை வழங்கிய படிவங் களை முறையாக பரிசீலித்து, தகுதி யான நிறுவனத்துக்கு, பணிக்கான ஒப்பந்த ஆணை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

-dinamalar

Leave a Reply