பஞ்சகவ்யா

‘உயிர்நீர்’ போலவே ‘பஞ்சகவ்யா’வும் பேசப்படும்!   

#NaturalFarming  #Panchakavya
“1950-ம் வருஷம் அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் பிரான்சிஸ் மார்ட்டின்ங்கிற விஞ்ஞானி, ‘உயிர்நீர்’னு சொல்லப்படும் நிறமற்ற, மணமற்ற திரவத்தை கண்டுபிடிச்சாரு. பால் தரும் பசுவின் சாணம், கடல் நீர், ஈஸ்ட்னு எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்து புளிக்க வெச்சு, அதை தயாரிச்சாரு. இதை பயன்படுத்துவதன் மூலமா, மாசுபட்ட நீரையும், மண்ணையும் துரிதமாக சீர்திருத்த முடியும்னு, நாலாம் வகுப்புக்குமேல பள்ளிக்கூடம் போகாத மார்ட்டின் சொன்னதை ஐம்பது வருஷத்துக்கு முன்ன யாரும் ஏத்துக்கல. ஆனா, அவர் இறந்த பிறகு, அந்தக் கண்டுபிடிப்பை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுறாங்க. இதேபோல்தான், பஞ்சகவ்யாவோட பயன்பாடும் அதி அற்புதமானது. இப்போ, ஒரு சிலர் இதை ஏத்துகலைனாலும், பஞ்கவ்யா வரும் காலத்துல பெரிய அளவுக்குப் பேசப்படும்” என்கிறார் கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின், வளம்குன்றா அங்கக வேளாண்மைத்துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர்.சோமசுந்தரம்.
பசுமை விகடன் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் பஞ்சகவ்யா தொடரிலிருந்து…

Leave a Reply