பசைக்காகிதச்செடி

பசைக்காகிதச்செடி (Pinguicula, பிங்குய்குலா அல்லது butterwort) என்பது ஊனுண்ணித் தாவரம் ஆகும். லண்டிபுளோரேசியீ என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இவை ஈரம் நிறைந்த சதுப்பு நிலப் பகுதிகளில் நன்கு வளர்கின்றன. இச்செடிகள் தரையை ஒட்டி வளருபவை. அடுக்கிய இதழ்கள் போன்ற இலைகள் அமைந்துள்ளன. இச்செடியில் சல்லி வேர்கள் மட்டுமே இருக்கின்றன. இத்தாவரங்கள் பூச்சியைப் பிடிக்க பசைக்காகிதம் போன்ற (fly paper) இலைகளைப் பெற்றுள்ளன
பசைக் காகிதம் தாவரத்தின் இலைகள் கொத்து கொத்தாக இருக்கும். இத்தாவரத்தின் இலையின் மேற்பரப்பில் இரண்டு வகையான சுரப்பி முடிகள் உள்ளன. ஒன்று சீரண சுரப்பி. மற்றொன்று பசைப்பொருளைச் சுரக்கும் சுரப்பி. சீரண சுரப்பி இரண்டு செல்கள் கொண்ட காம்பும் 8 செல்கள் கொண்ட தலைப்பகுதியும் உடையது. பசை சுரக்கும் முடிகள் நீண்ட காம்பும், குடை போன்ற தலையும் கொண்டது.
பூச்சிகளைப் பிடிக்கும் முறை[தொகு]
இலைப்பரப்பு முழுவது பசைப்பொருளைச் சுரக்கும் காம்புள்ள சுரப்பி முடிகள் உள்ளன . இப்பசையால் பூச்சிகள் கவரப்படுகின்றன. கவரப்பட்ட பூச்சிகள் இலைப் பரப்பில் வந்து அமரும்போது பசையில் பூச்சி ஒட்டிக் கொள்கிறது. மீண்டும் பூச்சியால் பறக்க முடிவதில்லை. இலையின் விளிம்புகள் உள்நோக்கி சுருண்டு பூச்சியை சிறைப்படுத்துகின்றன. பிறகு செரிமானச் சுரப்பிகள் செரிமான நீரைச் சுரந்து பூச்சிகள் செரிக்கப்படுகிறன்றன. பூச்சிகள் செரிக்கப்பட்ட பிறகு இலை மீண்டும் மெல்லத் திறந்துகொள்கிறது
காணப்படும் இடங்கள்[தொகு]
பசைக் காகிதம் செடிகள் மெக்சிகோ, தென் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் வளர்கின்றன. பொதுவாக இச்செடிகளை வீடுகளில் வளர்ப்பதில்லை. பூங்காக்களில் மட்டுமே வளர்க்கப்படுகின்றன.
வகைகள்[தொகு]
இந்த இனத்தில் 30 முதல் 40 வகைத் தாவரங்கள் உள்ளன.

Leave a Reply