பசுவின் ஒரு லிட்டர் கோமியத்தில் தங்கம் !

ஜுனாகாத் வேளாண் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து குஜராத்தின் பசு இனமான’ கிர்’ மாட்டைக் கொண்டு கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வந்தனர்.

இதில் 400 பசு மாடுகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 1 லிட்டர் சிறுநீரில் 3 முதல்10 மி.கி வரை தங்கம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மாட்டின் வயதைப் பொறுத்து தங்கம் கிடைக்கும் அளவு மாறுபடுகிறது. ஆனாலும் அனைத்து வகை கிர் இன பசு மாடுகளின் சிறுநீரிலும் தங்கம் நிச்சயம் இருக்கிறதாம்.

மாலை நேரத்தை விட காலை நேர மாட்டு கோமியத்தில்தான் தங்கம் அதிகளவு கலந்துள்ளதாம். வெள்ளி, துத்தநாகம், போரான் உள்ளிட்ட தனிமங்களும் பசு கோமியத்தில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பசுவின் கோமியத்தில் 5,100 வகையான பொருட்கள் உள்ளதைக் கண்டறிந்துள்ளனர். அதில் 388 பொருட்கள் மருத்துவ இயல்பு கொண்டவை. குஜராத்தில் தற்போது வெறும் 3,000 கிர் வகை பசுமாடுகள் மட்டுமே உள்ளன.

Leave a Reply