நோபல் சட்டதிட்டங்களை மாத்துங்க: ஓ.எஸ்.மணியன் மழுப்பல்!

அதெல்லாம் முடியாது, நோபல் சட்டதிட்டங்களை மாத்துங்க: ஓ.எஸ்.மணியன் மழுப்பல்!

தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். அப்போது அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேசினார்.

அதில் அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்கினால் அது நோபல் பரிசுக்கே கிடைக்கும பெருமை என தெரிவித்தார்.

மேலும், உயிருடன் இருக்கும் நபருக்குதான் நோபல் பரிசு வழங்கப்படும் என்பது தெரியும். ஆனால் நோபல் பரிசு வழங்குவதற்கான சட்டதிட்டங்களை மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதனை பரிசு வழங்கும் நாடுகள் பரிசிலனை செய்ய வெண்டும் என தெரிவித்தார்.

இதேபோன்று தேசிய விவசாயிகள் நாள் குறித்தும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மழுப்பலாகவே பேசினார்.

Leave a Reply