நுணவு

நுணவு எங்கும் நாம் பார்க்கூடிய ஒரு மூலிகை வகை தாவரம். செடியாகவும் மரமாகவும் பல்வேறு நிலப்பகுதியில் வளரக்கூடியது. எதிரடுக்கில் அமைந்த இலைகள். நாற்கோணத்தில் அமைந்துள்ள சிறு கிளைகளில் வெள்ளை நிற பூக்கள் கருப்பு நிற பழத்தையும் கொண்டது. சில இடங்களில் வெண்மை நிற பழங்கள் கொண்ட மரங்களும் உண்டு. மரத்தின் உட்புறம் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் மஞ்சணத்தி எனப்பெயர் பெற்றது.
இதன் துளிர் இலை, பகுப்பு, காய், பட்டை, வேர் ஆகியவை மருத்துவ பயன் கொண்டவையாகும்.

நமது உள்ளுறுப்புகளில் மிகவும் முக்கியமான கல்லீரல், மண்ணீரல் பாதிக்கப்பட்டால் அதை தீர்க்க தனிப்பட்ட சிறப்பு மருத்துவம் உண்டு. காவி அணிந்து விரதம் இருந்தால் சரியாகி விடும் என்பார்கள். அந்த காவியுடைக்கு தயாரிக்க மஞ்சணத்தியின் பட்டையை சுடு நீரில் போட்டு அதில் வெள்ளை பருத்தி ஆடையை துவைத்து எடுத்தால் காவியுடை தயாராகி விடும். இந்த ஆடையை அணிந்திருக்கும் போது அவர்களது மூச்சு குழல் வழியாக மருத்துவ காற்று சென்று இந்த நோய்களை குணப்படுத்தும். இதன் பழத்தை எந்த வயதுடையவர்களும் உண்ணலாம். வாயுத்தொல்லையால் அவதிபடுவார்கள் தொடர்ந்து இந்த பழத்தை உண்டால் மாற்றம் ஏற்படும்.

கைக்குழந்தைகளுக்கு தலை குளித்தவுடன் நொச்சி, வெற்றிலை, ஆடாதொடை ஆகியவற்றுடன் இதன் கொழுந்தை மசிய அரைத்து வெந்நீரில் கொடுப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு சுக பேதி உண்டாகி மலக்கட்டு, வாயு இல்லாமல் குழந்தைகள் ஆரோக்கியமாக வளருவார்கள். சளி தொல்லையும் இருக்காது. இது சிறிது உஷ்ணத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே அளவோடு பயன்படுத்த வேண்டும். இடுப்பு வலியை போக்க நுணவு இலையை மைய அரைத்து பற்றுபோட்டால் குணமாகும். இதை அடிக்கடி சிரங்கு பிடிக்கும் சிறுவர்களுக்கு சிரங்கில் தடவிவர சிரங்கு ஆறும்.

நுணவு இலைச்சாறு ஒரு பங்கும், உத்தாமணி, நொச்சி, பொடுதலை ஆகியவற்றின் சாறு சமமாக எடுத்து கலந்து அதில் ஒரு பங்கும் கலந்து ஆறு மாத குழந்தைக்கு 50 சொட்டும், 1 முதல் 2 வரை வயதுடைய குழந்தைகளுக்கு 15 மிலி அளவும், 3 வயதுக்கு மேல் 30 மில்லியும் மூன்று வேளை கொடுத்து வந்தால் அனைத்து மாந்தமும் தீரும். நுணவு இலை, நல்லெண்ணெய் ஒரே எடை எடுத்து அதை நன்கு காய்ச்சி அந்த கற்கத்தை உள்ளுக்குள் கொடுத்து, எண்ணெய்யை வெளியிலும் பூசி வர வெண்புள்ளி நீங்கும்.

நுணவுக்காய், உப்பு சம அளவு எடுத்து ஒரு குடுவைக்குள் வைத்து சீலை மண் செய்து 1 வரட்டியில் புடம் போட்டு கிடைக்கும் சாம்பலில் பல் துலக்கி வர சொத்தை பல், பல்லரணை நீங்கும். நுணவு தயிர் இலைகள், பழுப்பு இலை சம அளவு எடுத்து அதில் 35 கிராம் காட்டு சீரகத்தை கலந்து உரித்த தேங்காய் அளவு தயார் செய்து அந்த கலவையை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து சிறு தீயில் காய்ச்சி மெழுகு பதம் வந்தவுடன் எண்ணெய்யை பிழிந்து எடுத்து விட்டு மெழுகை சுண்டக்காய் அளவு உருட்டி வைத்து கொண்டு காலை மாலை பாலுடன் சாப்பிட்டு வந்தால் வயிற்று கோளாறுகள் அனைத்தும் நீங்கும். இதைத்தான்

பட்டை கரப்பனொடு பாரச்சி லேஷ்மசுரம்
ஒட்டிநின்ற புண்கிரந்தி ஓட்டுங்காண்- மட்டலரை
ஏந்து நுணாவின் இலைமந்தம் தீர்ந்துநல்ல
காந்திதரு மேகமடுங் காண்
நந்தவனத்தில் ஓர் ஆண்டி-அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி-மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’’

என்கின்றது தேரையர் வெண்பா. வயிற்று கோளாறு, மாந்தம், மேகம், சளித்தொல்லையால் ஏற்படும் கபசுரம் ஆகியவற்றுக்கு இதன் இலை சாற்றை உள்ளுக்கு கொடுப்பார்கள். கழலை, அரையாப்பு கட்டிகளை கரைத்தல். அடிப்பட்ட வீக்கம், வாதத்தால் ஏற்படும் வீக்கங்களை போக்குவதற்கு பற்று போடுவார்கள். இத்தகையை சிறப்பு குணங்களை கொண்டதாக விளங்க கூடிய மூலிகையான நுணவு எதுதெரியுமா? வேலியெங்கும் காட்சியளிக்கும் நுணாதான். இதில் கருப்பு மற்றும் வெள்ளை என்று இரண்டு வகைகள் உண்டு. பதப்படுத்தப்பட்ட வெள்ளை நுணா சாற்றைதான் நோனி என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பணத்தை கொடுத்து வாங்குகிறோம். கடவுள் கொடுத்தது கண் முன் இருக்க பணத்தை வீணாக்கி கண்டதை தேடி ஓடுகின்றோம். அதை விடுத்து முன்னோர்கள் நமக்கு காட்டிய வழியில் நுணாவை பயன்படுத்தி வாழ்வில் நலம் பெறுவோம்.

Leave a Reply