நிறம்

நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மை

சுவாமி சிவானந்தா சொல்லும் அழகான கதை ஒன்று…

காட்டில் வண்ணக்கிளி ஒன்று கறுப்பு காக்கையைக் கேலி செய்தது. கறுப்பு கறுப்பு என்று அவமதித்தது.. காக்கை வருத்தத்துடன் ‘’கடவுள் என்னைப் படைத்தபோது கரண்ட் கட்டாகி இருக்கும். அதற்கு நான் என்ன செய்ய? ‘’ என்று சலித்துக் கொண்டது.
அப்போது அங்கு வந்த வேட்டைக்கார் ஒருவர் பல்வேறு வண்ணங்கள் மின்னிய வண்ணக்கிளியை லபக்கென்று பிடித்துக் கொண்டார். கிளி சிக்கிக் கொண்டது. காக்கை சொன்னது ‘’ நல்ல வேளை …நான் ”Black & White” என்று பெருமைப்பட்டது.
கிளியை எங்கே கொண்டு போகிறார் என்று தொடர்ந்து போய் காகம் வேவு பார்த்தது. பாவம் கூட்டில் அடைத்து நம்மைப் போல் ‘’குட் மார்னிங் சொல்லு’’ என்று வேட்டைக்காரர் கிளியைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தார். பூண்டைச் சுட்டு கிளியின் நாக்கில் வைத்து நாக்கைப் பதப்படுத்தினார். வலி தாங்காமல் கிளி அலறியது.
அன்று அமாவாசை. வேட்டைக்காரர் மனைவி வாசல் சுவரில் படையல் சோறு படைத்து ‘’காகா’’ என்று கூவி அழைத்தாள். காகம் சிலிர்த்துக் கொண்டது. கிளியைப் பார்த்துச் சொன்னது.
‘’பார்த்தாயா …தன் பாஷையில் உன்னைப் பேச வைக்க சூடு வைக்கிறான். ஆனா என் பாஷையில் என்னைக் கூப்பிட்டு சோறு வைக்கிறான். I am Great” என்றபடி காகம் விருந்துண்ண பறந்தது.

உங்கள் நிறம்பற்றிய தாழ்வு மனப்பான்மை வரும் போதெல்லாம் இந்தக் கதையை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள்.

Leave a Reply