நா.முத்துக்குமார்

மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 41.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் நா.முத்துக்குமார். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார்.
‘காதல் கொண்டேன்’, ‘பிதாமகன்’, ‘கில்லி’, ‘கஜினி’, ‘நந்தா’, ‘புதுப்பேட்டை’, ‘காதல்’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘கற்றது தமிழ்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘காக்காமுட்டை’, ‘தெறி’ உள்ளிட்ட பல படங்களில் நா.முத்துக்குமார் எழுதிய பாடலகள் பெரிய வரவேற்பைப் பெற்றவை.
தமிழ் சினிமாவில் 92க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். ‘தங்கமீன்கள்’ படத்தில் இவர் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும், ‘சைவம்’ படத்தில் எழுதிய அழகே அழகே பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


தனித்துவம் மிக்க பாடல் வரிகள்:
”ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது, அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது, காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்,காற்றிடம் கோபம் கிடையாது, அலை கரையை கடந்த பின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி, என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா மண்ணில் வந்த நான் உன் நகலல்லவா, பேசி போன வார்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா? உயிரும் போகும் உருவம் போகுமா? போன்ற தனித்தன்மையான வரிகளால் கவனம் ஈர்த்தவர் நா.முத்துக்குமார்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட நா.முத்துக்குமார் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நா.முத்துக்குமார் இன்று காலை உயிரிழந்தார்.
நா.முத்துக்குமார் – தீபலஷ்மி தம்பதிக்கு ஆதவன் (9) என்ற மகனும், யோகலஷ்மி (8 மாதங்கள்) என்ற மகளும் உள்ளனர்.
முகப்பேரில் உள்ள நா.முத்துக்குமாரின் இல்லத்தில் திரையுலகினர் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 6 மணிக்கு நியூ ஆவடி ரோடு வேலங்காடு மின் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.
வார்த்தைகளில் வசியமருந்தை குழைத்து இளைஞர்களை மயக்குவதில் கவிப்பேரரசுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்றால் அது நா.முத்துக்குமார் தான்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடரும் இவரது இசையுலகப் பயணம் பத்தாவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த 2013ல் அதிக படங்களில், அதிக பாடல்கள் எழுதியவர் என்கிற பெருமையை தட்டிச்செல்கிறார் நா.முத்துக்குமர். அதிலும் 34 படங்களில் 106 பாடல்கள் என்பது மிகப்பெரிய சாதனை தான். இதில் 10 படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பது இன்னொரு சாதனை.

‘தங்கமீன்கள்’ படத்தில் “ஆனந்தயாழை மீட்டுகிறாய்”, ‘தலைவா’வில் “யார் இந்த சாலையோரம்”, ‘ராஜாராணி’யில் “சில்லென ஒரு மழைத்துளி”, ‘உதயம் என்.ஹெச்-4’ல் “யாரோ இவன்”, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வில் “ஒன்னப்பாத்த நேரம்” என இந்த வருடத்திய சூப்பர்ஹிட்டுகள் எல்லாமே நா.முத்துக்குமாரின் கைவண்ணம்தான்

Leave a Reply