நாட்டு மாடு-சீமை மாடு

நாட்டு மாடு-சீமை மாடு அடிப்படை

வித்தியாசங்கள்…
நாட்டு மாடுகள் பற்றி புரிந்து கொள்ள அடிப்படையில் நாடு என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நாடு என்றால் என்ன..?
இன்று உள்ளது போல படைபலம் கொண்டு தன்னால் இயன்ற அளவு பிடித்து கொள்வது நாடு அல்ல. நாடு என்பது ஒவ்வொரு பகுதியின் நீர் வடிகாலை பொறுத்து அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, மண்ணின் தன்மை பொறுத்து அமையும், ‘தன்னிறைவு பெற்ற ’ சீதோஷ்ண-சமூக-கலாசார-பொருளாதார மண்டலங்கள். உதாரணம்: கொங்கு நாடு மலைகள் சூழ்ந்து, அந்த மலைகளில் இருந்து வடியும் நீர் காவிரி உள்ளிட்ட நதிகளின் நீர்பிடிப்பு பகுதியாக இருக்கும். பாண்டிய நாட்டுக்கு வைகை போல சீதோஷ்ண மண்டலங்களே நாடுகள்.
நாடுகள் பிரிக்க பட்டாலும் இந்த தன்னிறைவு கொள்கை அடிப்படையில் பிரிக்கப்பட்டன. இதையே சனாதன கொள்கை (Sustainability) என்று சொல்வார்கள். அதாவது அந்நாட்டின் பெரும்பான்மை தேவைகளுக்கு அந்நாட்டை விட்டு வெளியே செல்ல தேவை இருக்காது. நாடுகள் ஏன்? நம் கிராமங்களே சனாதன கொள்கையின் அடிப்படையில் உருவானதே. வீட்டில் ‘செலவு டப்பா’ என்று சொல்கிறோமே, ஏன்..? அது ஒன்றுதான் செலவாக இருந்தது. அதாவது வெளியில் சென்று வாங்க வேண்டியது. மீதி பொருட்கள் எல்லாம் உள்ளூரிலேயே கிடைக்கும் படி நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள்.
அப்படியான நாடுகளில், அந்த நாடுகளுக்கேற்ப மண்ணின் நுண்ணுயிர்கள் முதல் செடி கொடிகள், காய் கறிகள், தானியங்கள், விலங்குகள், மனிதர்கள் அவர்தம் குணங்கள் செயல்பாடுகள் என அனைத்தும் மாறுபடும். இதையே நாட்டு ரகங்கள் என்கிறோம். இவை அந்த மண்ணின் தன்மையும், நீரையும், சீதோஷ்ண நிலையையும் அனுசரித்து வருவதால் அம்மண்ணிற்கேற்ற வகைகள்-அதை தாங்கி வாழ கூடியதும் ஆகும்.
Bos Taurus-Bos Indicus
சீமை மாடுகளை ‘உயர் ரக’ என்னும் ஆடை மொழி கொடுத்து நம் நாட்டிற்குள் “பல்வேறு சக்திகள்” திட்டமிட்டு நுழைத்து விட்டன. ஆனால் அவை முதலில் நம் மாடுகளே அல்ல. தற்கால அறிவியல் உலகம் ஒவ்வொரு உயிரினத்திற்கும் கொடுக்கும் உயிரியல் பேரை (Zoological Name) கொண்டே அறியலாம்.
நாட்டு பசுக்கள் – Bos Indicus.
சீமை மாடுகள் (பன்றிகள்) – Bos Taurus

எனவே, சீமை மாடுகள் என்பன நம் மாட்டின் வகை என்பதே தவறு.
அவசியம் ஒரு நாட்டு மாடு வளங்க ரொம்ப முக்கியம் அல்ல ரொம்ப அவசியம்
நாட்டு பசுக்கள் 1.5-4 லிட் கறக்கையில் சீமை மாடுகள் (பன்றிகள்) ஆறு – பத்து லிட் பால் கறக்கிறது. ஏன்..? 
அதற்கு இயற்கையிலேயே பெண்மை தன்மை மிகுதி. பெண்மை ஹார்மோன் அதிகம். மூன்று நான்கு ஈத்துக்களில் சினை பிடிக்கும் தன்மை நின்று விடும். போதாக்குறைக்கு சீமை மாடுகளில் மரபணு மாற்றம் ஹார்மோன் ஊசி என்று ஏற்றி அதன் உடல் செயல்பாட்டையே கெடுத்து விடுகிறார்கள். சீமை காளைகளை பார்த்தால் உணர்ச்சியற்ற ஜடமாக நிற்கும். அதன் பாலியல் உணர்வு மிக குறைவு. இதனால் சீமை பன்றி பாலை குடித்தால் கொஞ்சம் கொஞ்சமாக நமது உடலின் ஹார்மோன் சமநிலை தடுமாற துவங்கும்.
உணர்ச்சி பெருக்கடைந்த பெண்கள், உணர்ச்சி குறைபாடுடைய ஆண்கள் என்று சமூகம் சமநிலையை இழக்கும். இதனால் சமூகத்தில் கற்பொழுக்கம் சாத்தியமற்றதாகிறது.
✯ இந்த ஹார்மோன் சமநிலை தடுமாற்றம் உடலின் அனைத்து செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கர்ப்பப்பை கோளாறுகள் , பால் சுரப்பு , முறையற்ற மாதவிடாய் கோளாறு, சீக்கிரம் மாதவிடாய் நின்று விடுதல் என மறைமுக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
✯ சீமை மாடுகளை யார் வேண்டுமானாலும் தொடலாம் பால் கறக்கலாம். எதுவும் செய்யாமல் ஜடமாக நிற்கும். இதன் பாலை குடிக்கும் ஆண்களும் பெண்களும் அதுபோலத்தான் இருப்பார்கள். ரோஷம்-சொரணை குறையும் . மூளையின் செயல்பாட்டில் வேகம் குறையும். முன்னாளில் சின்ன வார்த்தை தவறி சொன்னாலும் அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதும், கிட்டே நெருங்கி வரும்போதே எட்ட தள்ளி நின்று பேசும் பெண்களையும், சிறிய அவமதிப்பென்றாலும் உடனடியாக ரியாக்ட் செய்யும் பெரியவர்களையும் கண்டுள்ளோம். இன்று எவ்வளவு மட்டமாக பேசினாலும் சொரணை கேட்டு போனதுபோல் நிற்கும்படி குணம் எப்படி மாறியது..?
✯ நாட்டு பசுக்களின் உடலில் ஆண்-பெண் ஹார்மோன் சரி விகிதமாக சீராக உள்ளது . அதன் பால் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தும்போது சீரற்ற ஹார்மோன் உள்ள உடலையும் சீராக்கும். இதனால் சீரான முறையான ஒழுக்கமான வாழ்க்கையை வாழ நம் உடலும் ஒத்துழைக்கும்.
✯ நாட்டு பசுக்களை அதன் எஜமானரை தவிர கண்டவர்கள் எல்லாம் தொட முடியாது. ஓரிடத்தில் தொட்டால் அந்த இடத்தை மட்டும் சிலிர்த்து காட்டும். அவ்வளவு உணர்வு உள்ளது . அதன் பாலை தொடர்ந்து பயன்படுத்தும் போது புத்தி கூர்மை, ரோஷம், வீரம், தன்னிலை உணர்தல் எல்லாம் சரிவர நடக்கும்.
✯ சீமை மாடுகளை பயன்படுத்துவோர், அதன் தாக்கம் முதல் தலைமுறையில் தெரியா விட்டாலும், மரபணு மூலமாக இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையில் நிச்சயம் தெரிந்து விடும்.
“என் மக்கள்” 

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…

Leave a Reply