நம் விவசாயிகளுக்கு உதவ இப்படி செய்தால் என்ன

நம் விவசாயிகளுக்கு உதவ இப்படி செய்தால் என்ன…!

அதாவது “கோடை-2016” என்ற பெயரில் வரும் கோடை முழுவதும்(ஏப்ரல்,மே) பெப்சி/கோக் போன்ற பன்னாட்டு குளிர்பானங்களை முற்றிலுமாக தவிர்த்து

பழச்சாறு, கரும்புச்சாறு, இளநீர், மோர், கூழ் மற்றும் நுங்கு இவற்றை மட்டுமே நாம் பருகினால் விவசாயிகளும் , சிறுவியாபாரிகளும் வரும் கோடையிலாவது பயன் பெறுவர்.

கோடை வெப்பதைத் தணிக்க நாம் செய்யும் செலவு நம் விவசாயிகளை கடனிலிருந்தும், தற்கொலையிலிருந்தும் காக்கும்.

என்ன நண்பர்களே நம் விவசாயிகளை பாதுகாக்க “கோடை-2016” என்னும் பேரில் இரண்டுமாத இயக்கம் ஒன்றினை மக்களிடம் கொண்டு சேர்ப்போமா…?

இவ்வளவு நாட்கள் பெருமை க்கு பினாயில் (பெப்ஸி,கோக்,மிரான்டா,ஃபேன்டா,மற்றும் பல) குடித்தது போதும்.,.இனியாவது திருந்துவோம்.இல்லையாயின் மூச்சு வாங்கக்கூட பன்னாட்டு வணிகர்களிடம்தான் மன்றாட வேண்டும்.

நண்பர்களே முடிந்தவரை இந்த செய்தியை அதிகமாக
பகிரவும்..
நன்றி…வணக்கம்…

Leave a Reply