நமது ராணுவ வீரர்களூக்கு மோசமான உணவு வழங்குவதாக புகார்

சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது பிரச்சனைகளை ராணுவ வீரர்கள் பேசுவது தவறானது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பணிபுரியும் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரரின் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் ராணுவ வீரர் ஒருவர், எல்லை பாதுகாப்பு படையில் மோசமான உணவு வழங்கப்படுவதாகவும், சில நேரங்களில் வெறும் வயிற்றோடு படுக்க செல்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது பிரச்சனைகளை ராணுவ வீரர்கள் பேசுவது என்பது மிகவும் தவறானது என்று அவர்களது அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக துணை ராணுவத்தின் மூத்த கமாண்டே பிரசாத் கூறுகையில், சமூக வலை தளங்கள் மூலமாக பேசுவது ஆரோக்கியமானது அல்ல மற்றும் சரியானதும் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply