தேர்தல் பிரசாரம், கட்-அவுட், பேனர்கள் தயாரிக்க போஸ் குடுத்த சசிகலா

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீண்டும் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இப்போது அதை நட்சத்திர ஹோட்டலில் நடத்தியுள்ளார்.

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா புதிதாக நடத்தியுள்ள போட்டோ ஷூட் படம் ஒன்று வைரலாகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஹோட்டலில் நட்சத்திர ‘இந்தியா டுடே’ ஊடகத்தின் இரண்டு நாள் ஊடக மாநாடு நடைபெற்றது.

இதில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, நடிகர் கமல்ஹாசன், நடிகை தமன்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

டெல்லியை தவிர்த்து, தென்னிந்தியாவில் முதல்முறையாக நடந்தது இந்தியா டுடே மாநாடு. நேற்று சசிகலா பங்கேற்ற நிகழ்ச்சி முடிந்த பின்பு, ஹோட்டலில் இருந்த ஸ்டுடியோவில் சசிகலா போட்டோ ஷூட் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டூடுடியோ லைட்டிங் மத்தியில் சசிகலா சிரித்தபடி அசத்தலாக நிற்கும் போட்டோக்கள் கசிந்துள்ளன. தேர்தல் பிரசாரம், கட்-அவுட், பேனர்கள் தயாரிக்க சசிகலாவின் விதவிதமான போட்டோக்களை வெளியிட திட்டமிட்டுள்ளதே போட்டோ ஷூட்டுக்கு காரணம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு போட்டோ ஷூட் நடத்தி, ஜெயலலிதா அமரும் நாற்காலியில் அமர்ந்து அவரை போலவே போஸ் கொடுத்திருந்தார் சசிகலா. இந்நிலையில் இப்போது ஸ்டார் ஹோட்டலிலும் போட்டோ ஷூட் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
oneindia

Leave a Reply