தூங்கு மூஞ்சி மரம்

தூங்கு மூஞ்சி மரம் என்ற பெயரைக் கேட்டாலே அப்படியே சோம்பல் பற்றிக் கொள்ளும். இதன் இலைகள் மடிந்து மூடிக்கொண்டிருப்பதால், பாவம், இதற்கு இப்படி ஒரு பெயர்.

ஆனால் இது தன்னால் முடிந்தவரை பூமியைக் குளிர்விக்க முயல்கிறது. ஆமாம் பகல் நேரத்தில் தன் மேல் பட்டைகளிலும், இலைகளிலும் ஈரப்பதத்தைச் சேமித்து வைத்துக் கொள்கிறது. இரவு நேரத்தில் அதை மழைத்தூறல் போல உதிர்க்கும்.

இதனாலேயே இதற்கு மழை மரம் என்றும் பெயர். நல்ல விஷயங்களைத்தான் கவனிப்பாரில்லையே … அதனால் தான் இதன் அருமையான தன்மை கவனிக்கப்படாமல் தூங்கு மூஞ்சி என்று அவமானப்படுத்தப்படுகிறது.

Read more: http://www.viduthalai.in/page-1/9857.html#ixzz3YFKbDBrD

Thoongu moonji maram (tree with sleeping leaf) இந்த மரத்துக்கு ஆங்கிலத்தில் ( Rain Tree )எனப்பெயர். தென் அமெரிக்கா,மெக்ஸிகோ பிரேசிலிலிருந்து வந்தது. தமிழில் தூங்கு மூஞ்சி மரம். மாலை நேரம், மேகமூட்டம் அல்லது மழை நாளில் இந்த மரத்தின் இலைகள் மூடிக்கொள்ளும் (leaf are light sensitive and close together from dusk to dawn) அப்போது தான் மழை நீர் பூமிக்கு வர ஏதுவாக இருக்கும். இயற்கையின் படைப்பு!. இந்த மரத்துக்கு ஆங்கிலத்தில் அதனால் தான் Rain Tree என்று பெயர் வைத்துள்ளனர்

2 comments

Leave a Reply