துளசி

துளசி மாடத்தில் இருக்கக்கூடிய அந்த துளசி இலையை ஒரு மூன்று இலை எடுத்து கூடவே சிறிது பச்சைக்கற்பூரம், சிறிகு மஞ்சள்தூள் சேர்த்து அதை சூடான வெந்நீரில் கலந்து சாப்பிட்டு விட்டு அதிகாலையில் வேலையை ஆரம்பிக்கும் பொழுது அவர்களுடைய உடல் ஆரோக்கியம் என்பது மிகச் சிறந்த முறையில் இருக்கும்.
துளசி மல்லி கசாயம் என்று நாம் சொல்லுவோம், இதனை மிக எளிமையாக செய்யலாம். ஒரு கைப்பிடியளவு துளசி இலை, ஒரு தேக்கரண்டி அளவு மல்லி , சிறிது சுக்கு, நான்கு ஏலக்காய் இவையனைத்தையும் ஒன்றிரண்டாக சிதைத்து தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் சேர்த்து நாம் அருந்தினோம் என்றால் கண்டிப்பாக இரத்த அழுத்தம் முழுமையாக சரியாகும்.
துளசி மல்லி கசாயத்தை தொடர்ந்து அருந்துகிற பொழுது உங்களுக்கு எலும்புகள் சார்ந்த எந்தப் பிரச்சனைகளும் இருக்காது, Infections இருக்காது. Sinusitis என்று சொல்லக்கூடிய தும்மல் அதாவது நச் நச்சென்று தும்மிக்கொண்டே இருக்கக்கூடிய சூழல் இருக்காது

இரத்த அழுத்தத்திற்கு இன்னொரு மருந்து பார்ப்போம். துளசி இலை ஒரு கைப்பிடியளவு, வில்வம் இலை ஒரு கைப்பிடியளவு இவையிரண்டையும் தண்ணீர்விட்டு நன்றாக அவித்து வடிகட்டி கூடவே ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து, அதில் ஒரு பல் பூண்டை பச்சையாக சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து நீங்கள் சாப்பிட்டுப் பாருங்கள் இரத்த அழுத்தம் உடனே சரியாகும். இதயம் சார்ந்த நோய்கள், இதய வால்வுகளில் உள்ள அடைப்புகள் அனைத்துமே நீண்ட நாள் உபயோகத்தில் கண்டிப்பாக சரியாகும். மூச்சுத்திணறல் இல்லாத ஒரு சூழல் சீரான சுவாசம் மேம்படும். ஆக மிக எளிமையாக செய்யக்கூடிய ஒரு துளசி வில்வக் கசாயத்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் ஏராளம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். ஆக உடலையும் மனதையும் சாந்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த துளசிக்கு உண்டு.

தூக்கமின்மையை சரிசெய்யக்கூடிய ஒரு அற்புதமான மருந்து நமது துளசி என்றே சொல்ல வேண்டும். ஒரு கைப்பிடி துளசி இலை, நான்கு தாமரை இதழ்கள்( பச்சையாகவும் இருக்கலாம் உலர்ந்ததாகவும் இருக்கலாம்) இதனுடன் சிறிது சுக்கு மற்றும் ஏலக்காய் சேர்த்து கசாயமாக செய்து வடிகட்டி பனைவெல்லம் சேர்த்து இரவுநேரத்தில் அருந்துகிற பொழுது மிக அற்புதமான பலனைக் கொடுக்கும். நல்ல கனவுகள் என்பது கொடுத்து வைத்தவர்களுக்குத்தான் வரும் என்று சொல்வோம். ஆக இரவுநேர தூக்கத்தில் மிகவும் ஏகாந்தமான கனவுகளோடு அல்லது கனவே இல்லாத நிலையில் அற்புதமாக தூங்கவேண்டும் என்றால் இந்த துளசி, தாமரைஇலை, சுக்கு, ஏலக்காய் சேர்த்த கசாயத்தை அருந்துகிற பொழுது மிகவும் அற்புதமான தூக்கத்திற்கு சொந்தக்காரர்களாக ஆவீர்கள். மறுநாள் காலையில் நீங்கள் மனத் தெளிவுடன், மிகுந்த உற்சாகத்துடனும் உங்களது பணிகளை நீங்கள் செய்கிற பொழுது அந்த செயல்பாடுகளில் இருக்கக்கூடிய மனநிறைவை நீங்கள் உணர்வீர்கள்.

துளசி நிறைய சாப்பிடுகிற பொழுது ஆண்மை பறிபோகும் என்று நம்பக்கூடியவர்கள் நிறைய நபர்கள் இருக்கிறார்கள். அதுமாதிரி எதுவும் ஆகாது என்று இந்த கட்டுரை வாயிலாக சிறகு இணையதள நேயர்களுக்கு சொல்கிறேன். துளசி மனக்கட்டுப்பாட்டைத் தரக்கூடிய ஒரு மிகச்சிறந்த உணவு. ஒரு மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு இல்லை என்றால் கண்ட பெண்கள் மேல் எல்லாம் காதல் வரும். ஒரு மனிதனுக்கு மனசஞ்சலம் அதிகமாக இருந்தது என்றால் போகிற வருகிற பெண்கள் மீதெல்லாம் தமது காமப்பார்வை வரக்கூடிய சூழல் உண்டாகும். ஆனால் துளசி அப்படிப்பட்டதல்ல, துளசியை மருந்தாக சாப்பிடுகிற பொழுது அந்த உணர்ச்சி என்பது தனக்குள் கட்டுக்குள் இருக்கும். தன்னுடைய மனைவியை மட்டும் தொடுகிற பொழுது, ஒருவனுக்கு ஒருத்தியாக இருக்கிற பொழுது தன் மனைவியிடம் போகிக்கக்கூடிய அந்தத்தருணங்களில், தாம்பத்தியம் அனுபவிக்கக்கூடிய அந்தத் தருணங்களில் துளசி தன்னுடைய வல்லமையைக் காட்டி நல்ல ஆழ்ந்த நீண்ட ஒரு சந்தோசமான புணர்ச்சிக்கு வழிகொடுக்கும் . ஆக துளசியைப் பற்றிய தவறான அபிப்ராயம் யாருக்கும் வேண்டாம், எவருக்கும் வேண்டாம்.
நீங்கள் கசாயமாக செய்து சாப்பிடக்கூடிய நேரமின்மை இருந்தால்கூட தினசரி ஐந்து துளசிஇலை, மூன்று மிளகு நன்றாக மென்று சாப்பிட்டு ஒரு டம்ளர் வெந்நீர் அருந்தி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு சளி, இருமல், கபம் போன்ற எந்த நோய்களும் வராது, இரத்த அழுத்தம் வராது, இதயநோய் வராது, நுரையீரல் சரியாகும், மனம் தெளிவாகும், புத்தி கூர்மையாகும், செயல் அதிகமாகும், சிந்தனை எண்ணிலடங்கா அளவு வளமாகும்

Leave a Reply