தும்மலில் வகை

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தும்முவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இதற்குக் காரணம் என்ன என்று என்றாவது யோசித்திருப்பீர்களா, நண்பர்களே?

நமது நுரையீரலில் இருந்து திடீரென வெளிவரும் காற்றானது வாய் மற்றும் மூக்கு வழியாக வெளிவருவது தும்மல் ஆகும். தும்மல் ஏற்படும் போது நமது முகம், தொண்டை மற்றும் மார்புப் பகுதிகளில் தீவிர தசைச் சுருக்கங்கள் தோன்றும். பிரகாசமான வெளிச்சத்தினால் கூட தும்மல் ஏற்படும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் பிரகாசமான வெளிச்சத்தினால் கூட தும்மல் ஏற்படும், அதற்குப் ‘போட்டிக் ஸ்னீஸிங்க்’ என்று பெயர். இத்தகைய தும்மல் ஐந்தில் ஒருவருக்கு இருக்கிறது.

ஒவ்வொருவரின் சரீர அமைப்பினைப் பொறுத்தும், அவர்களின் தும்மல் விதம் வேறுபடும். இதில் நுரையீரல், காற்றுக்குழல் ஆகியவற்றின் அளவுகள் மற்றும் தொண்டை, மார்பினை சுற்றியுள்ள தசைப்பகுதி முக்கியப்பங்கு வகிக்கின்றன. தும்மல் வரும்போது அதனைத் தடுக்கும் வகையில் மூக்கிற்கு அழுத்தம் கொடுக்காதீர்கள், அது உங்களின் செவிப்பறையில் பாதிப்பினை ஏற்படுத்தும். ஒரு சில வேளைகளில் இது கட்டுப்படுத்த முடியாத சிறுநீர் வெளியேற்றத்தையும் ஏற்படுத்தும்.

வித்தியாசமான தும்மல் பற்றி 18,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக சத்தத்துடன் தும்மல் போடுபவர்கள் தன்னம்பிக்கை மற்றும் ஆக்கிரமிப்பு கொண்டவர்களாக இருப்பர். குறைந்த சத்தத்துடன் தும்மல் போடுபவர்கள் குறைந்த தன்னம்பிக்கை, வெட்கம் மற்றும் உள்முகச்சிந்தனை கொண்டவர்களாக இருப்பர்.

சாதாரணத் தும்மலுக்குப் பின்னால் இத்தனை விஷயங்கள் உள்ளதா எனத் நிச்சயமாக உங்களுக்குத் தோன்றும். நீங்கள் எப்படித் தும்முவீர்கள்? அதிக சத்தத்துடனா, குறைந்த சத்தத்துடனா?

 

அறிவு டோஸ்

Leave a Reply