தாவரங்கள் பிரிவு

நம்மைச் சுற்றிலும் பலவிதமான தாவரங்கள் இருக்கின்றன. நாம் சாதாரணமாகப் பார்க்கும் தாவரங்களுக்கு தண்டும் வேரும் உள்ளன. வேர், மண்ணுக்கு அடியில் புதைந்துருக்கும், தண்டில், கிளைகள் பரவி இருக்கும். கிளையில் இலைகளும், பூக்களும் உள்ளன. பூக்கள் காய்களாகி, பின்னர் கனியாகின்றன. கனியில் விதைகள் உள்ளன. விதைகளை மண்ணுக்கு அடியில் புதைத்தால், வேரும், தண்டும் உருவாகி புதுத்தாவரமாக முளைக்கிறது. ஆனால், எல்லா தாவரங்களும் இந்த வரையறைக்குள் அடங்குவதில்லை. தாவரங்களை பாசி, பெரணி, ஊசியிலை மற்றும் பூ பூப்பவை என நான்கு பிரிவுகளாக பிரிக்கின்றனர்.

பாசி
காலை வைத்தால் வழுக்கும் பாசியை நீங்கள் பார்த்திருக்கலாம். இவை, ஈரமான பரப்பில் மெத்தென்று வளர்ந்திருக்கும். குறிப்பாகக் குளங்கள், பெரிய மரங்களின் அடியில் இவை காணப்படுகின்றன. ஒன்றிலிருந்து 10செ.மீ. உயரத்துக்கு வளரக்கூடியது. இவற்றுக்கு மெலிந்த தண்டும், மெல்லிய ஊசி போன்ற இலைகளும் உண்டு. ஆனால் வேர் கிடையாது. தாவரவியலில் இவற்றுக்கு ‘பிரையோபைட்டா’ என்று பெயர். உலக அளவில் சுமார் 10 ஆயிரம் பாசிகள் உள்ளன.

பெரணி
நீண்டு வளரும் இந்தத் தாவர வகைக்கு, தண்டுகள், இளைகள், கிளைகள் உண்டு. இலைகள், ஊசிபோல இருக்கும். இவற்றுக்கு பூ கிடையாது. ஆனால், விதைகள் உண்டு. பல விதைகள் கொத்தாக இருக்கும். இவற்றின் தாவரவியல் பெயர் ‘பினோபைட்டா’ சில நூறு தாவரங்களே இந்த வகையில் உள்ளன.

ஊசியிலை
இவற்றுக்கும் தண்டும், இலைகள் உண்டு. வேர்கூட உண்டு, ஆனால், பூவும், விதையும் கிடையாது. காடுகள், மலைகள் என பல்வேறு தட்பவெப்பநிலைகளில் வளரக்கூடியவை. தாவரவியலில் இவற்றுக்கு ‘டெரிடோபைட்டா’ என்று பெயர். உலக அளவில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரணி வகைகள் உள்ளன.

பூ பூப்பவை
இதுதான் நாம் தினமும் பார்க்கும் தாவரவகை. வேர், தண்டு, கிளைகள், இலைகள், பூக்கள், விதைகள் என எல்லாமே இவற்றுக்கு உண்டு. இவற்றின் தாவரவியல் பெயர் ‘மேகேனோலியோபைட்டா’. இந்த வகையில் தான் பெரும் பாலான தாவரங்கள் உள்ளன. மிகச்சிறிய செடியில் இருந்து, மிகப்பெரிய மரங்களும், நேராக நிற்க முடியாத கொடிகளும் கூட இந்த வகையில் அடங்கும்.

Leave a Reply