தலைப்பாகை

மூளைக்குத் தேவையான கதிர்வீச்சுக்கள் வெளியேறாமல் இருப்பதற்காகவே இத் தலைப்பாகை அணியப்படுகின்றது. மூளை என்பது எமது உடலின் மூலஸ்தானம். அதாவது எமது உடலின் Head of the Department. இதில் ஏதாவது பிழை ஏற்பட்டால், வாழ்நாள் முழுவதும் கடினத்தை அநுபவிக்க வேண்டியதுதான். எமது உடலினுள் ஞானசக்தி, போகசக்தி என்பன உண்டு. ஞானசக்தி மூளையிலும் போகசக்தி அடிவயிற்றிலும் இருக்கின்றது. எனவே இச் சக்திகள் வெளியேறாமல் இருக்க தலைப்பாகை அணிவது வழக்கமாக இருந்தது. இது கோயில் கோபுரம் போன்ற நிலையில் கட்டப்பட வேண்டும். கூராகக் கட்டும் போது மனிதசக்தியும் பரசக்தியும் நேராக அமையும். அதாவது பூமியிலுள்ள சக்தி காலினூடாக உடலை வந்தடைந்து மனிதசக்தியாகின்றது. இது எமது உடலினுள் உள்ள சக்தியாகும். அத்துடன்; வெளியுலக சக்தியாகிய பரசக்தி நேராக இணைகின்றது. இதுவே இந்த தலைப்பாகை அணியும் குறிக்கோளாகக் கொள்ளப்பட்டது. எதுவும் காரணம் இல்லாமல் செய்யப்படவில்லை. காரணம் புரியாமலே நாம் காலத்தைக் கழிக்கின்றோம்.

Leave a Reply