தர்பூசணி தினம்

இன்று என்ன தினம்? ஆகஸ்ட் 3 என்கிறீர்களா…? இன்றைக்கு தர்பூசணி தினம்! ஆம்.. தென்னாப்பிரிக்காவில் பிறந்த தர்பூசணியைக் கொண்டாடும் பொருட்டு உருவாக்கப்பட்டதே தர்பூசணி நாள்.
USA வில் இந்த தினத்தை முன்னிட்டு, விடுமுறை அளிக்கப்படுகிறது. Colorado வில் முதல்முறையாக தர்பூசணி நாள் கொண்டாடப்பட்டது. 1878 ம் ஆண்டு, G. W. Swink என்பவர், 25 பேருடன் இணைந்து தர்பூசணி நாளைக் கொண்டாடினர். சில ஆண்டுகளில், ஏறத்தாழ 12,000 பேர் தர்பூசணி நாளைக் கொண்டாடத் தொடங்கினார்கள். இதனால், தர்பூசணிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாம்!
வருடங்கள் ஓட ஓட தர்பூசணி தினம் தவறாமல் கொண்டாடப்பட்டு, தற்போது உலகில் பல நாடுகளில் தர்பூசணி தினம் கொண்டாடப்படுகிறது. இன்று நாமும் தர்பூசணி பற்றி சில தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

தர்பூசணியைப் பற்றி நமக்குத் தெரிந்தது என்ன? அது கோடை காலத்தில் அதிகம் விளையும் ஒரு பழம். இனிப்பாக, அதிக விதைகளுடன் இருக்கும். நீர் சத்து அதிகம். அநேகமாக இவ்வளவுதான் நமக்கு தெரியும். ஆனால், தர்பூசணி பற்றி நமக்குத் தெரியாத சில பல தகவல்களின் தொகுப்பு இதோ…

√ உலகிலேயே சீனாதான் அதிக அளவு தர்பூசணிகளை விளைவிக்கிறது.

√தர்பூசணி Pepo எனும் பெர்ரி வகை குடும்பத்தைச் சார்ந்தது.
√ Oklahomaவின் தேசியக் காய் தர்பூசணி!

√ முன் காலங்களில், வெகுதூரம் பயணம் செல்பவர்கள் நீருக்குப் பதிலாக தர்பூசணி பழங்களைச் சுமந்து செல்வார்களாம்.
√ உலகில் இதுவரை 1,200 வகை தர்பூசணிக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

√ டயட்டில் இருப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.

நன்மைகள்

√ காய் மற்றும் கனி வகைகளுக்கு அடர் சிவப்பு நிறத்தைக் கொடுப்பது Lycopene. 6 mg தர்பூசணியில் 4 mg தக்காளியில் உள்ளது போல 1.5 மடங்கு அதிக லைக்கோபீன் உள்ளது. ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் லைக்கோபீன், பக்கவாதம் (Stroke) ஏற்படுத்துவதையும் குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல், புற்றுநோயைத் தடுக்கும் (anti-cncer activity) வேலையையும் லைக்கோபீன் செய்கிறது. பெண்களில் சினைப்பை புற்று நோய் வராமல் தடுக்கிறது லைக்கோபீன். அதனால், லைக்கோபீன் அதிகமுள்ள உணவுகளை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

√ l-citrulline எனும் ஒரு வகை அமினோ அமிலம் தர்பூசணியில் உள்ளதால், தசை வலிகளைக் குறைக்கும் தன்மை தர்பூசணிக்கு உண்டு.

√ இதுதவிர, தர்பூசணியில் அதிகளவு இரும்புச் சத்து, வைட்டமின் சி, பி6, ஏ, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளது.

√ தர்பூசணியில் 92-93% வரை நீர், நீர், நீர் மட்டுமே! அதனால்தான் இதன் பெயர் தண்ணீர்பழம். தர்பூசணி, நீர்ச்சத்து மிகுந்த பழம் என்பதால், உடலுக்கு மிகவும் நல்லது.

√ தர்பூசணியில் சதைப்பகுதியில் உள்ள சத்தைவிட அதிகளவு அதன் வெண்ணிற அடிப்பகுதியில் உள்ளது. அதை அப்படியே உண்ணலாம், இல்லை கூட்டு போலச் சமைத்து சாப்பிடலாம்.

√ தர்பூசணியின் விதையும் உடலுக்கு மிகவும் நல்லது. அதை வறுத்து உண்ணலாம். இனிப்பு பதார்த்தங்களில், முந்திரி பிஸ்தா போல இந்த விதைகளையும் வறுத்து போடலாம்.

இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கிய தர்பூசணியின்(!) தினத்தை எப்படிக் கொண்டாடுவது? கடைக்குச் சென்று ஒரு துண்டு தர்பூசணி சாப்பிடுங்கள். இல்லை, ஒரு தர்பூசணி ஜூஸ், சாலட் என ஏதாவது ஒரு வகையில் தர்பூசணியை சாப்பிடுங்கள்

இனிய தர்பூசணி தின வாழ்த்துக்கள்..!

 

நன்றி  விகடன்

Leave a Reply