தமிழ்நாட்டில் வந்து பண்ணை ஆரம்பியுங்கள்

ரோசெஸ்டர் நகரில் இருந்து சுமார் 25 கி மீட்டர் தொலைவில் பல பழத்தோட்ட பண்ணைகள் இருக்கின்றன… ஆப்பிள், ஆரஞ்சு, கிரேப், ஸ்டாபெரி பழப் பண்ணைகள்… யார் வேண்டுமானாலும் அங்கு போய் புத்தம் புதிய பழங்கள் வாங்கலாம்… கடை விலையை விட மலிவு…. இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லைதான்… ஆனால் ஆச்சரியமான விஷயம் ஒன்று உண்டு…

யார் வேண்டுமானாலும் நேரடியாக அந்தத் தோட்டங்களுக்குப் போய் நேரிடையாக நாமே தேவையானதை பறித்துக் கொள்ளலாம்… எவ்வளவு வேண்டுமானலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்… யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்… நாங்கள் ஸ்டாபெரி பழத் தோட்டத்திற்குப் போயிருந்தோம்… இன்னும் கிரேப் ஆப்பிள் தோட்டங்களில் சீசன் ஆரம்பமாகவில்லை…

அருமையான தோட்டம்… வேர்க்கடலை செடி – மிளகாய்ச் செடி மாதிரி இருக்கின்றன ஸ்டாபெரி தோட்டம்…இலையை விலக்கி விட்டுப் பார்த்தால் கொத்து கொத்தாக ஸ்டாபெரி பழங்கள்… அவ்வளவு ருசி….குழந்தைகளோடு வருகிறார்கள்… அளவோடு சாப்பிடுகிறார்கள்… அதிகம் சாப்பிட்டது நான்தான்… இலவசம் என்றால் நமக்கு கொள்ளைதானே…?

நம்ம ஊரில் மாங்காய் தோட்டத்தில் ஒரு மாங்காயை தெரியாமல் பறித்து விட்டால் மரத்தில் கட்டி வைத்து விடுவார்கள்
இங்கு எப்படி அனுமதிக்கிறார்கள் என்பது தெரியவில்லை…
அங்கிருந்தவரிடம் கேட்டேன்… அவர் சிரித்துக் கொண்டே சொன்னார் –

“நம்மவர்கள்தானே… எவ்வளவு
சாப்பிட்டாலும் என்ன குறைந்து
விடப் போகிறோம்?“

அவரிடம் ஒரு அறிவுரை சொல்ல நினைத்தேன்….

“தமிழ்நாட்டில் வந்து பண்ணை ஆரம்பியுங்கள்“

Leave a Reply