தமிழர்களின் உணவுப் பழக்கம்

உணவுப் பழக்கத்தை 12 வகையாக தமிழர்கள் பிரித்துள்ளனர்.
மிகச்சிறிய அளவே உட்கொள்வது- “அருந்துதல்“,
பசிதீர சாப்பிடுவது- “உண்ணல்“,
நீர் சேர்ந்த பண்டத்தை ஈர்த்து உண்பது – “உறிஞ்சுதல்“,
நீரியல் உணவை உறிஞ்சி பசி நீங்க உட்கொள்வது- “குடித்தல்“,
பண்டங்களை கடித்து உட்கொள்வது- “தின்றல்“,
ரசித்து மகிழ்வது-“துய்த்தல்”,
நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல்-“நக்கல்“,
முழுவதையும் ஒரே வாயில் உறிஞ்சினால்- “முழுங்கல்”, நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது- “பருகல்”, பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொண்டால் – “மாந்தல்“,
கடிய பண்டத்தை கடித்து உண்பது- “கடித்தல்”,
வாயில் வைத்து அதிகம் அரைக்காமல் உண்பது – “விழுங்கல்“.
தமிழர்கள் வாழும் பகுதி நீண்ட கடற்கரையை கொண்டுள்ள தால், கடலுணவும் அவர்களின் உணவுப் பழக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி ஆகியவை தமிழர்களால் விரும்பி உண்ணப்படுகின்றது.
தமிழர்கள் கோழி, ஆடு, மாடு, பன்றி, அணில், முயல், உடும்பு போன்ற உணவுகளை உண்ணும் வழக்கம் உடையவர்கள். கோவில்களில் விலங்குகளை காவு கொடுத்து அதன் இறைச்சியை பங்கு போட்டு உண்ணும் வழக்கமும் உண்டு.
தமிழர்களின் சமையல் இடங்களுக்கு ஏற்ப பல வித்தியாசங் களையும், சிறப்புகளையும் கொண்டது. ஈழத்தமிழர் சமையல், மதுரைச் சமையல், கொங்குநாட்டு சமையல், செட்டிநாடு சமையல், அந்தணர் சமையல், சேலம் சமையல், நெல்லை சமையல், இஸ்லாமியத் தமிழர் சமையல், கிராமியத் தமிழர் சமையல், கனேடியத் தமிழர் சமையல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
அம்மி, குழவி, உரல், உறி, ஆட்டுக்கல், திருகைக்கல், திருகணி, மண் அடுப்பு, உலக்கை, அரிவாள்மனை, முறம், சுளகு, அகப்பை, மூக்குப்பேணி போன்ற சமையல் அறை கருவிகளை தமிழர்கள் பயன்படுத்தினர். இவைகளில் பல இப்போது உபயோகத்தில் இல்லை

Leave a Reply