தமிழக அரசு சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் .

புதுடில்லி:தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக, 2016, ஜன., 8ல் பிறப்பித்த அரசாணையை திரும்பப் பெறுவதாக, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் போராட்டம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட், 2014ல் தடை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக் களையும், சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக, 2016, ஜன., 8ல், மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்டவழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி, சமீபத்தில் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. மாணவர்கள் நடத்திய இந்த எழுச்சி மிக்க போராட்டத்தைத் தொடர்ந்து, தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இந்த நிலையில், ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில், தமிழக சட்டசபையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, சட்ட சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்காக, ஜல்லிக்கட்டு நடத்த, 2016ல் பிறப்பித்த அரசாணையை திரும்பப்பெறுவ தாக, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர் வில், இதை, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி நேற்று தெரிவித்தார்.இது தொடர் பான வழக்கு விசாரணையின்போது, அரசாணையை திரும்பப் பெற, மத்திய அரசு அளித்துள்ள விண்ணப்பம் மீது முடிவெடுக்கப் படும் என,சுப்ரீம் கோர்ட் அமர்வு தெரிவித்துள்ளது.

கேவியட் மனு :

இதனிடையில், தமிழக அரசு கொண்டு வந் துள்ள சட்டம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் டில், 70 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த சட்டத்தை எதிர்த்து யாராவது வழக்கு தொடர்ந்தால், அதில் முடி வெடுக்கும் முன், தங்களிடம் விசாரிக்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில், கேவி யட் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

 கேவியட் மனு என்பது என்ன?கேவியட் மனு (Caveat Petition) தாக்கல் செய்யும் வாதிக்கு எதிராக, முன் அறிவிப்பு இன்றி, ஒரு குறிப்பிட்ட காரியத்தில், பிரதிவாதிக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதை தடுக்க, வாதி சார்பில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவை கேவியட் மனு என்பர்.[1]

கேவியட் எனும் இலத்தீன் மொழிச் சொல்லிற்கு முன் எச்சரிக்கை என்று பொருள்.[2] [3]முன்னெச்சரிக்கையாக கேவியட் மனு தாக்கல் செய்தவரின் கருத்தை அறிந்த பின்பே வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும்.

நீதிமன்றத்தில் ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் ஒரு விஷயம் குறித்து வழக்கு தாக்கல் செய்யும் போது, அவ்வழக்கு தம்மை பாதிக்கும் எனக் கருதும் ஒருவர் அல்லது ஒரு நிறுவனம், தன்னை அல்லது நிறுவனத்தை கலந்து ஆலோசிக்காமல் வழக்கின் தீர்ப்பு கூறக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்வர். கேவியட் மனு தாக்கல் செய்பவரின் விளக்கத்தைப் பெற்றுத்தான் நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை வழங்குவதால், தனி மனித அல்லது நிறுவனத்தின் உரிமை காக்கப்படுகிறது.

Leave a Reply