தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும்”-தமிழக முதல்வர் தகவல்..!

தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் ஓ

தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும்
 1. .தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படும்.
 2. தமிழக விவசாயிகளின் நிலவரி மற்றும் பயிர்க்கடன் ஆகியவை ஒட்டு மொத்தமாக ரத்து செய்யப்படும்
 3. .33 சதவீதத்திற்கு அதிகமாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்படும்.
 4. 100 நாள் வேலைத் திட்டத்தின் கால அளவு 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.
 5. வங்கிக் கடன் மத்தியக் கால கடனாக மாற்றப்படும்.
 6. வறட்சியில் இருந்து வன விலங்குகளை பாதுகாக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
  நிவாரண உதவியாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு 5,465 ரூபாய் வழங்கப்படும்.
 7. மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு 3,000 ரூபாய் வழங்கப்படும்.மஞ்சளுக்கு ஏக்கருக்கு 50,000 ரூபாய் அளிக்கப்படும்.
 8. இதற்கான அன்னவாரி சான்றிதழ் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.மேலும் வறட்சி நிவாரண கோரிக்கை மனு விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

  இதுவரை 17 விவசாயிகள் வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இவர்கள் குடும்பத்தினருக்கு மூன்று லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும்.வறட்சி பாதிப்பால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.இது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விரிவான அறிக்கை கேட்கப்படும்.” தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply