தமிழகத்தின் முதல்வர் சசிகலா…விரைவில்

முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் போயஸ் இல்லம் சென்று சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் மாறி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சசிகலாதான் முதல்வராக வேண்டும் என்று இன்று மக்களவை துணை சபாநாயகருக்கான லேட்டர்பேடில் தம்பிதுரை அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் போயஸ் கார்டன் சென்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த சந்திப்பு இன்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மேலும் சென்னை, திருவள்ளுவர் மாவட்ட செயலாளர்களும் சசிகலாவை சந்தித்து வருகின்றனர்.
தமிழகத்தின் முதல்வர் சசிகலா என்ற அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply