தண்டு கீரை

கீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். இதில் சில நார் உள்ளவைகளாக இருக்கும். அந்த நாரை எடுத்துவிட்டு சமையல் செய்ய வேண்டும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்து இருக்கிறது. அதனால் மேல் தோலை மட்டும் சீவி விட்டு நசுக்கி சமையலில் பயன்படுத்தலாம்.

கீரைத் தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். இது மலத்தை நன்றாக இளக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது நலம். கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றை சேர்த்தும் சமைக்கலாம்.

கீரைத் தண்டு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும்.

காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.

கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் தொட்டு கூட பார்ப்பதில்லை. இதை பெற்றோர்தான் மாற்ற வேண்டும். சின்ன வயதில் இருந்தே குழந்தை களுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.

கீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.

இன்றைக்கு என்ன கூட்டு அல்லது பொரியல்? என்ற கேள்விக்கு கீரை என்று பதில் வந்தால், கீரை தானா என்று சலிப்போடு நாமும் பதில் சொல்லுவோம்.
கீரையை மலிவான பதார்த்தம் என்று எண்ணி, தள்ளி விடுவது பழக்கமாகி விட்டது. ஆனால், இன்றைய கால கட்டத்தில் நம்மில் பலர், கீரைகளின் அருமை பெருமைகளை அறிந்து வருகிறோம். கீரை வகைகளிலே மிக பெரியதும் உயரமானதுமான, தண்டுக்கீரையைப் பற்றி அறிந்து கொள்வோம்.
தண்டுக்கீரையை மிகச் சரியான பருவத்தில் பறித்தால், அதன் கீரையும் தண்டும் மிகச் சிறந்த காய்கறியாகும். இக்கீரையின் தண்டுகளை, மெல்லியதாக வெட்டி பாசிப்பருப்புடன் சேர்த்து, வேக வைத்து சாம்பாராகவோ அல்லது கூட்டாகவோ சமைத்து சாப்பிடலாம்.
கீரையின் இலைகளை முளைக்கீரை போன்றும் சாப்பிடலாம். பித்தம், மிகுதி உள்ளவர்கள் தண்டுக்கீரையை நன்கு பயன்படுத்தலாம். தண்டைச் சாப்பிட்டு வந்தால், உடல் மெலிந்து விடும் என்று பயப்பட வேண்டாம். இதை உண்டால் சிறுநீர் நன்கு போவதால், உடல் எடை குறைந்தது போன்று தெரியும். இதில் நார்ச்சத்து இருப்பதால், ரத்தம் சுத்தி அடையும். மலச்சிக்கல் இல்லாமல் செய்து விடும்.
இக்கீரையை தினமும் உண்டு வரலாம். இதனால், இளமையில் முதுமை தவிர்க்கப்படுகிறது. முதுமையில் ஏற்படும் கால்சியம். இரும்பு விகித வேறுபாட்டை சரி செய்யக்கூடியது.
கருவுற்ற பெண்கள், தினமும் அரை கப் தண்டுக்கீரைச் சாற்றுடன், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தி வந்தால், மகப்பேறு
எளிதாக நடக்கும். குழந்தையும் நல்ல வளர்ச்சியுடன் காணப்படும். இதில் கால்சியம், 400 மி.கி., உள்ளது. இவ்வளவு அதிகமான கால்
சியம் சத்து முருங்கைக்கீரை, வெந்தயக்கீரையில் மட்டுமே உள்ளது.

உடல் பருமனை குறைக்க விரும்புவோர், வாரம் ஒரு முறை தண்டுக்கீரை சாப்பிடுவது நல்லது.

குடல் புண் உள்ளவர்கள் இந்தக் கீரையை மசியலோ அல்லது லேசாக வதக்கியோ உணவுடன் எடுத்துக் கொள்வது சிறந்தது.

இந்தக் கீரையில், இரும்பு சத்து, கால்சியம் சத்து ஆகியவை அதிகமாக உள்ளன.

தண்டுக்கீரை மூல நோய்க்கு மிகவும் சிறந்தது.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் சிவப்பு நிற தண்டு கீரையை உணவுடன் எடுத்துக்கொண்டால், மாதவிடாய் வலி சற்று குறையும்.

பெண்களின் கருப்பை கோளாருகளுக்கும் இந்த வகைக் கீரை நல்லது.

இந்த கீரை ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

தண்டுக்கீரையில் நோய் தாடுப்பு சக்தி மிகுதியாக உள்ளது.

இந்தக்கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, வைட்டமின் பி,சி நார்சத்து ஆகியவை உள்ளது.

தண்டுக்கீரை மலச்சிக்கலை குணமாக்க வல்லது

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25938&ncat=11

http://www.koodal.com/health/food_guide.asp?id=359

http://www.valaitamil.com/benefits-of-amaranthus-caudatus-leaves_10874.html

Leave a Reply