தகவல் தெரியுமா?

பழக்கம்

வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது இயல்பாகவே வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.

விழி விரியும்

‘வியப்பால் அவள் விழிகள் விரிந்தன’ என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை… அல்லது, ஆச்சரியம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 சதவீதம் விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அலையோசை

கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.

Leave a Reply