டோடோ

டோடோ (dodo) (Raphus cucullatus) அழிந்த பறவையினங்களில் ஒன்று. பழங்காலத்தில் வாழ்ந்த பறவை இனங்களில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஒரு அபூர்வப் பறவை. இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள மொரீசியஸ் தீவில் தான் டோடோ என்ற இந்த அழிந்துபோன பறவை வாழ்ந்து வந்தது. டோடோ என்ற சொல்லுக்கு போர்த்துகீசிய மொழியில் முட்டாள் அல்லது அற்பமான என்பது பொருள். இதுமொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரமான டோடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; பழங்களை உணவாகக் கொண்டது…!

இது மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். கிட்டத்தட்ட ஒரு மீட்டர் உயரமான டோடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; பழங்களை உணவாகக்கொண்டது. மனிதர்களை கண்டால் ஆவலுடன் ஓடி வரும் குழந்தை போல..!

பழங்காலத்தில் மொரீசியஸ் தீவில் வாழ்ந்துகொண்டிருந்த இந்தப் பறவைகளுக்கு 1598-ஆம் நூற்றாண்டில் மொரிசியஸ் தீவில் வந்து இறங்கிய போர்ச்சுகீசியர்ளால் ஆபத்து வந்தது… மனிதர்களிடம் குழந்தை போல விளையாடிய பறவைகளை தீவிரமாக வேட்டையாடி உண்ண ஆரம்பித்தனர். 100 ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக அந்த இனமே அழிக்கப்பட்டது! கடைசி பறவையும் 1681 ல் இறந்தது..!!

அதன்பின்தான் ஒரு உண்மை மனிதனுக்கு புரிந்தது..! அந்த பறவை இனம் அழிந்தவுடன் “கல்வாரியா” எனப்படும் மரமும் அழிய ஆரமித்தது..! மரங்கள் அழிவுக்கு காரணம் என்னவென்று பார்த்த போதுதான் ஒரு உண்மை தெரிந்தது டோடோ பறவை கல்வாரியா மரத்தின் பழங்களை விரும்பி உண்ணக் கூடியவை. அவ்வாறு உண்டு தன் வயிற்றில் செரித்து வெளியேறும் கழிவுகளில் கலந்து விழும் விதைகள் மட்டுமே அந்த மரத்தை முளைக்க வைக்கும் தன்மை கொண்டது..

மனித மண்டையோட்டைப்போல கடினமான உறையுடைய விதைகளை உடையது என்பதால் அந்த மரத்திற்கு இப்பெயர். இந்த மரத்தின் பழங்களை டோடோ தின்றுவிட்டு கொட்டைகளைத் துப்புவது வழக்கம். டோடோக்களின் வயிற்றினுள் புகுந்து வந்த கல்வாரியா விதைகள் மட்டுமே முளைக்கும்திறன் பெற்றவையாக இருந்தது. வேறு எந்த விதத்திலும் அந்த விதையை முளைக்க வைக்க முடியவில்லை..!

இப்படியொரு ஆச்சரிய உறவு பறவைக்கும், மரத்திற்கும் இருந்திருக்கிறது. இதை அறியாத மக்கள் டோடோ பறவையை வேட்டையாடிவிட, அதைத் தொடர்ந்து அதனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த கல்வாரியா மர இனமும் பெருமளவில் அழிந்தது.
இடுகையிட்டது தெருவிளக்கு

Leave a Reply