டிரம்பட்

எக்காளம் அல்லது எம்பவுபா ( டிரம்பட்) மரம் பரவலாக மத்திய மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் பாரம்பரிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்காக பயன்படுகிறது.

பட்டை, வேர்கள், மென்மரப்பகுதி, இலைகள் மற்றும் பழங்கள் போன்றவை நோய்களுக்கு நிவாரணம் அளிக்க கூடியதாக இருந்து வருகிறது. இந்த தாவரத்தில் இருந்து வரும் சாற்றை ஒவ்வொரு நாட்டிலும் ,வெவ்வெறு பயனுக்காக பயன்படுத்துகிறார்கள்.
மூச்சுக்குழாய் அழற்சி, பாம்பு கடி, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த மரத்தை வைத்து சமீபத்தில் அறிவியல் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. உடல் பருமன் சிகிச்சை, பாக்டீரியா தொற்று மற்றும் புற்றுநோய் போன்றவற்றுக்கு இந்த தாவரம் சிறந்த மருந்தாகும் என்று அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

சுவாசக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு சிகிச்சைக்கு மூலிகையாளர்கள் இந்த மரத்தை உலகம் முழுவதிலும் பயன்படுத்துகிறார்கள். அதனால் இந்த மரம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில் இந்த மரத்தைப் பற்றி தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply