ஜெ. பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் அல்ல: அன்புமணி

பாமகவின் இளைஞர் அணித் தலைவரான அன்புமணி ராமதாஸ், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்கக் கோரியுள்ள தமிழக அரசின் வேண்டுகோளைக் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அன்புமணி அளித்த சிறப்புப் பேட்டியில்,

தமிழக அரசு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. ஆனால் விருதைப் பெற அவர் தகுதியானவர் இல்லை. ஜெயலலிதா 15 ஊழல் வழக்குகளைச் சந்தித்தவர்.

  • . வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகக் கூறப்பட்ட நிலையில் அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குக்கான மேல்முறையீட்டுத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.
  • சிறையில் தன்னுடைய நாட்களைக் கழித்த ஒரே முதலமைச்சர் அவர்தான்.                      ஜெயலலிதா   தமிழ்நாட்டை சீர்குலைந்த நிலையில் விட்டுச் சென்றுள்ளார்
  • . தமிழ்நாட்டின் கடன் ரூ. 5.10 லட்சம் கோடிகளைத் தாண்டிச் சென்றுள்ளது. தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் குறைவாக உள்ளது. அவரின் ஆட்சிக்காலத்தில் விவசாயம் எதிர்மறையான வளர்ச்சியைப் பெற்றது.

தேசத்தின் உயரிய விருதான பாரத ரத்னா அப்பழுக்கில்லாத, நேர்மையான தலைவர்களுக்கும் தேசத்தின் வளர்ச்சிக்காக தன்னிகரற்ற பங்களிப்பை அளித்தவர்களுக்குமே வழங்கப்பட வேண்டும். இந்த வகைமைகளில் ஜெயலலிதா பொருந்தமாட்டார் என்று கூறியுள்ளார்

Leave a Reply