ஜெயலலிதா மட்டும் உயிருடன் இருந்தால்..

ஜெயலலிதா இருந்திருந்தால் வருமான வரித்துறையினர் தலைமை செயலக அலுவலகத்திற்குள் நுழைய முடியுமா?

என சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் பத்திரிகையாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த வாரம் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் வீடு, அலுவலகம் மற்றும் அவரது மகன் விவேக், உறவினர்கள் வீடுகளில் வாரம் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல லட்சம் மதிப்பிலான ரூபாய், தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ராமமோகன் ராவை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில், தனது வீட்டில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்த ராமமோகன் ராவ், வருமான வரித்துறை சோதனை மூலம் தலைமைச் செயலகத்தை காப்பாற்ற அரசு தவறிவிட்டது. இந்த சோதனை அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்.

வருமான வரித்துறையினர் சோதனையின் போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டேன். தலைமைச் செயலாளரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது அரசியல் சட்ட விரோதம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு ஆதரவு தெரிவித்த மம்தா பானர்ஜி மற்றும் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெயலலிதா இருந்தால் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் நுழைய முடியுமா. துணை இராணுவப்படையினருக்கு எனது அறையில் என்ன வேலை, துப்பாக்கி முனையில் நுழைந்து எனது வீட்டினை சோதனை நடத்தினர். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறியுள்ளார்.

Leave a Reply