ஜெயலலிதா கோவிலில் குவியும் பொதுமக்கள் -தஞ்சை

தஞ்சை மேல வீதியை சேர்ந்தவர் சாமிநாதன். 18-வது வார்டு முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர். தஞ்சை மாநகராட்சி கொறடாவாகவும் இருந்தார்.

இவர் தஞ்சை மேல வீதி கொங்கணேஸ்வரர் கோவில் அருகில் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டி உள்ளார். ரூ. 2 லட்சம் செலவில் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது.

இதற்கு புரட்சி தலைவி அம்மா ஆலயம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இக் கோவிலில் ஜெயலலிதாவின் பொன் மொழிகளுள் ஒன்றான மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற வாசகம் இடம் பெற்று உள்ளது.

இங்கு கருவறையில் ஜெயலலிதாவின் 1½ அடி உயர மார்பளவு வெண்கல சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை இன்னும் 25 நாட்களில் தயார் செய்யப்பட்டு வைக்கப்படுகிறது. மேலும் ஜெயலலிதாவின் உருவப்படமும் வைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக தஞ்சையில் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ள தகவல் கிடைத்ததும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து இக்கோவிலை ஆர்வமுடன் பார்த்து செல்கிறார்கள்.

நேற்று ஏராளமானோர் வந்து சென்றனர்.அ.தி.மு.க. தொண்டர்கள் தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். மெரீனாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது போல் தஞ்சையில் உள்ள ஜெயலலிதா கோவிலுக்கும் வருகிறார்கள்.

Leave a Reply