ஜல்லிகட்டு போராட்டம் – யார் இந்த சி்றுமி

இதற்காகத்தான் என் 8 வயது மகளை ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு அனுப்பினேன்!” – உருகும் தந்தை..

Turtles can fly’ என்கிற ஈரானிய படத்தில் ஹீரோ சாட்டிலைட் என்கிற கதாபாத்திரத்தின் கூடவே துறுதுறுவென ஒரு கதாபாத்திரம் வந்துகொண்டேயிருக்கும். கிட்டத்தட்ட ஸ்வேதா அப்படித்தான் இருக்கிறார், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அலங்காநல்லூர் போராட்டக்களத்தில் எதிரொலித்த எட்டு வயது ஸ்வேதாவின் குரல்தான் தற்போது ஒட்டுமொத்தமான தமிழ்நாட்டின் பிரம்மாண்ட செல்லக்குரல்.

ஸ்வேதா”சொந்த ஊரு சோழவந்தான். இப்போ இருக்குறது கோச்சடை. எனக்கு இரண்டு பொண்ணுங்க, பெரிய பொண்ணு ஸ்ரீநிதி. சின்னப் பொண்ணு ஸ்வேதா. ரெண்டாவது படிக்கிறா. அப்படியே எதிர்மாறானா பொண்ணு. நாங்க விவசாயக் குடும்பம்தான். ஆனா, இப்போ உள்ள நிலைமையில விவசாயத்த சுருக்கிக்கிட்டோம். எங்க வீட்டுலேயும் சரி, என் மனைவி வீட்டுலேயும் சரி… ஜல்லிக்கட்டு காளைகள் இருந்துச்சு. ஆனா, இப்போ அதுவும் இல்ல. இதைப்பத்தி எல்லாம் வீட்டுல பேசுவோம். நாங்க ஜல்லிக்கட்ட நேருல பார்த்து வளர்ந்த தலைமுறை, ஸ்வேதாவுக்கு டிவில-தான் காட்டி இருக்கோம்.

பெத்தவுங்களான நாம  பண்ற விஷயங்கள்தான் குழந்தைங்ககிட்ட முதல்ல போய்ச் சேரும். நம்மள பார்த்துத்தானே அவுங்க கத்துக்கிறாங்க. வீட்டுல சும்மா இருக்குற நேரத்துல விவசாயத்த பத்திப் பேசுவோம். நம்மாழ்வார் கருத்துகளை இவங்களுக்கு ஏத்த மாதிரி கதை பாணில சொல்வோம், இப்படி நாங்க பேசுற எல்லா விஷயத்துலேயுமே அவளோட கவனம் இருக்கும். பீட்டாவ பத்தி நாங்க பேசிக்கிட்டு இருக்கும்போது அதென்னப்பா காளை மாட்ட மட்டும் தடை பண்றாங்க? பசுவும் மாடுதானே, அதை தடை ஸ்வேதாபண்ண மாட்டாங்களா? அப்புறம் ஏன் பால் கறக்குறாங்கன்னு எதிரெதிர் கேள்வி கேட்க ஆரம்பிச்சுடுவா. அவ கேட்குற  கேள்விக்கு பதில் சொல்லிடுவோம்..சில கேள்விகளுக்கு நாங்களும் பதில் தெரியாம முழிக்க ஆரம்பிச்சுடுவோம்.

ரொம்ப சேட்டைக்கார பொண்ணு. ஆனாலும் படிப்பு, படம் வரையுறதுன்னு எல்லாத்துலயும் தனித்துவம் இருக்கும். இப்போகூட ஸ்கூலுக்கு போறப்போ… ‘திரும்ப எப்போ அப்பா அலங்காநல்லூரு போகலாம்’னு கேட்குறா? பிரச்னை சரி ஆகிடும். இல்லைன்னா திரும்பப் போகலாம்னு சொல்லியிருக்கேன்.

எங்க வீட்டைப் பொறுத்தவரை பையன் பொண்ணு எல்லாம் பிரிவினை இல்ல. இங்க எல்லாருமே ஒண்ணுதான் .இது எங்க தலைமுறையோட முடிஞ்சுப்போற பிரச்னை இல்ல. நம்ம மேல நசுக்கப்படுற  அதிகாரத்த எதிர்த்து கேள்வி கேட்கணும்கிற ஒரு துடிப்பு அவுங்களுக்குள்ளேயும் வரணும். அப்படிங்கிறதுக்காகத்தான் நாங்கள் அனுப்பிவெச்சோம்” என்றார் ஸ்வேதாவின் தந்தை அசோக்.

vikatan

Leave a Reply