செயற்கை சுவாச கருவி (ventilator)

ஒருவர் உடம்பில் உள்ள செல்கள் வேலை செய்ய பிராண வாயு வேண்டும்
அந்த பிராண வாயு இரத்தில் செல்ல அவர் மூச்சு விட வேண்டும்
ஒருவர் மூச்சு விட மூளைத்தண்டு, முதுகுதண்டு, உதரவிதான நரம்பு, நெஞ்சுக்கூட்டிடை நரம்புகள், தசைகள் என்று பலவும் வேலை செய்ய வேண்டும்
இதில் ஏதாவது ஒன்றில் பிரச்சனை என்றால் சுவாசிக்க முடியாது. எனவே இரத்தில் பிராண வாயுவின் அளவு குறைந்து விடும்
அப்படி இருந்தால், அந்த நபருக்கு பல பாதிப்புகள் ஏற்படும். மரணம் கூட ஏற்படும்
-oOo-
மூளைத்தண்டு பிரச்சனை, (brain stem dysfunction)
முதுகுத்தணடு பிரச்சனை (spinal cord dysfunction)
உதரவிதான நரம்பு பிரச்சனை (Phrenic Nerve Lesions)
நெஞ்சுக்கூட்டிடை நரம்புகள்பிரச்சனை (intercostal nerves)
நரம்பு தசை இணைப்பு பிரச்சனை (Neuro muscular junction)
தசை பிரச்சனை (muscles)
என்று என்ன பிரச்சனை என்றாலும் சுவாசம் தடைபடலாம்
இதில் பல பிரச்சனைகள் தற்காலிகமானவையே
சிறிது நேரம் (அது சில நிமிடம், சில மணி, சில நாள் ஆக இருக்கலாம்) கழித்து அந்த பிரச்சனை சரியாகி, அநத நபரால் மீண்டும் மூச்சு விட இயலும்
-oOo-
ஆனால்
அந்த பிரச்சனை சரியாகும் வரை திசுக்களுக்கு பிராணவாயு தேவையல்லவா . . .அப்படி பிராணவாயு இல்லை என்றால் திசுக்கள் இறந்து விடும் அல்லவா
அப்படி என்றால் என்ன செய்வது
-oOo-
உடல் தன்னைத்தானே மீட்டுக்கொண்டு வரும் வரை செயற்கை சுவாசம் அளிக்கப்பட வேண்டும்
இப்படி அளிக்கும் கருவிகள் பல உள்ளன. இவற்றை செயற்கை சுவாக கருவிகள் என்று அழைப்பார்கள். (ventilator)
-oOo-
உடலில் உள்ள பிரச்சனை சரியாகும் வரை இந்த செயற்கை சுவாச கருவி செயல்பட்டு செயற்கையாக சுவாசம் அளிக்கும்.
திரும்ப உடல் செயல்பட்ட பிறகு அந்த நபர் தானாகவே சுவாசிப்பார்
-oOo-
ஆக
ஒருவரால் மூச்சு விட முடியவில்லை என்றால்
நாம் செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும்
ஒரு வேளை அவர் உடல் முன்னேறினால், அவர் தானாகவே சுவாசிக்க ஆரம்பித்து விடுவார். இந்த செயற்கை சுவாசத்தை எடுத்து விடலாம்
ஒருவேளை உடல் முன்னேறவில்லை என்றால் சிறிது நேரத்தில் இதயமும் நின்று விடும். அவர் இறந்ததாக கருத வேண்டும்
-oOo-
எனவே
செயற்கை சுவாக கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படும் அனைவரும் உயிர் பிழைத்து வருவார்கள் என்று சொல்ல முடியாது
ஆனால்
மூச்சு விட முடியாத நிலையில் இருக்கும் அனைவருக்கும் இந்த சிகிச்சையை செய்ய வேண்டியது நமது கடமை
-oOo-
இங்கு இருப்பது ஒரே பிரச்சனைதான் . . .
ஒருவர் சுயமாக மூச்சு விட முடியாத அளவு பாதிப்பு உள்ளது என்றால் அவரது கை கால் அசையுமா ?
அசையாது தானே . . .
எனவே மூச்சு விட முடியாத பிரச்சனையுடன் இருப்பவர்களில் பெரும்பாலானர்வர்கள் மயக்க நிலையிலேயே இருப்பார்கள்
இது தான் பிரச்சனை. அப்படி மயக்க நிலையில் இருப்பவர் இறந்து விட்டதாக பலரும் தவறாக கருதுகிறார்கள்

இந்த புத்திசாலிகள் மற்றும் அதி புத்திசாலிகளுக்கு, இன்றைய நாளிதழில் வந்த “18 மாத குழந்தையை செயற்கை சுவாசம் மூலம் காப்பாற்றிய தேனி அரசு மருத்துவர்கள்” என்ற செய்தி சமர்ப்பணம்
சுவாச மண்டலம் செயலிழந்த 18 மாத குழந்தைக்கு 100 நாட்களுக்கும் மேலாக செயற்கை சுவாசம் அளித்து காப்பாற்றி தேனி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளை யம் வட்டம் சின்ன ஓவுலாபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ்- ஈஸ்வரி தம்பதியின் மகன் ஈஸ்வரன் (18 மாதம்). இக்குழந்தையின் கை, கால், செயல் இழந்து, சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த மூன்றரை மாதங்களுக்கு முன்பு, குழந்தைக்கு திடீர் என காய்ச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. பெற்றோர் குழந்தையை உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) அளிக்கப்பட்டு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் மதிப்பிலான இம்யூனோகுளோபின் மருந்து உடனடியாக வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் கண்காணித்து வந்தனர். குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்க சிறப்பு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. 100 நாட்களுக்கு மேல் செயற்கை சுவாசத்தில் இருந்த குழந்தையின் உடல் நலம் முன்னேற்றம் அடைந்தது. தற்போது குழந்தை நலமுடன் பெற்றோருடன் அனுப்பப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடாசலம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 18 மாதக் குழந்தைக்கு செயற்கை சுவாச அறுவை சிகிச்சையும், 100 நாட்களுக்கு மேல் செயற்கை சுவாசம் அளித்தும் குணமடையச் செய்த சம்பவம் அரசு மருத்துவம னையில் இதுவே முதல் முறை யாகும். இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் லட்சக்கணக்கில் செலவாகும். ஆனால், அரசு மருத்துவமனை யில் சிறப்பான பணிகளை மேற் கொண்டு குழந்தையை காப்பாற் றிய மருத்துவர்கள், செவிலியர் களுக்கு மாவட்ட நிர்வாகம் பாராட்டி வாழ்த்து தெரிவிக்கிறது என்றார்.
-oOo-
எனவே
செயற்கை சுவாக கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படும் அனைவரும் உயிர் பிழைத்து வருவார்கள் என்று சொல்ல முடியாது
ஆனால்
மூச்சு விட முடியாத நிலையில் இருக்கும் அனைவருக்கும் இந்த சிகிச்சையை செய்ய வேண்டியது நமது கடமை
எனவே
அடுத்த முறை யாராவது “இறந்த பிறகு வைத்தியம்” போன்ற பொய்களை சொன்னால், அவர்களுக்கு செயற்கை சுவாசம் குறித்த தெளிவை ஏற்படுத்துங்கள்
இந்த கட்டுரையை அதிகம் பகிருங்கள்.
_DR.T.விஷ்ணு பொன் சிங்.

Leave a Reply