செப்.2: சர்வதேச தேங்காய் தினம்

செப்.2: சர்வதேச தேங்காய் தினம்
தேங்காய் சிறப்புகள் மற்றும் மருத்துவ குணங்களை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த 2009 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2 ஆம் தேதியை உலகம் முழுவதும் தேங்காய் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளில் தென்னை மரம் இல்லாத வீடுகளை காண்பது அரிது. பாடலிபுத்ராவில்  கிமு 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெகஸ்தனிஸ் என்பவர் இலங்கையில் உள்ள தேங்காய் பற்றி குறிப்புகள் எழுதி வைத்து உள்ளார். தென்னயை  தென்னிந்தியாவில்  இருந்து தான்  வட இந்தியாவிற்கு பரவி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   தேங்காய் தமிழர்களின் உணவிலும் மருத்துவத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. சங்க இலக்கியங்களிலும் ராமாயணம்  மகாபாரதம் விஷ்ணு புராணம் போன்றவற்றிலும் தேங்காய் பற்றிய குறிப்புகள் உள்ளன.  தேங்காயின் சிறப்புகளை காணலாம். தேங்காயானது தமிழர்களின் மங்களகரமான பொருட்களில் மஞ்சளுக்கு அடுத்த இடம் தேங்காய்க்கு தான். சித்த மருத்துவத்தில் தேங்காய்க்கு முக்கிய இடமுண்டு. பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மை இந்த தேங்காய்க்கு உண்டு. தேங்காயில் மாவுச்சத்து கொழுப்பு மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிக அளவிலும், தயமின் இரும்பு நியாசின் பாஸ்பரஸ் பொட்டாசியம் போன்ற நுண்ணிய சத்துக்கள் குறிபிட்ட அளவிலும் உள்ளன. 

                

லோ.பிரபுகுமார்

மாணவர் பத்திரிகையாளர்

Leave a Reply