சென்னையில் இயற்கை விளைபொருள் கண்காட்சி

சென்னையில் முதல் முறையாக இயற்கை விளை பொருள் கண்காட்சி நடைபெற உள்ளது.
பெசன்ட் நகரில் உள்ள ஸ்பேஸ் அரங்கில் இம்மாதம் 7-ம் தேதி இக்கண்காட்சி நடைபெற உள்ளது.
ஆரோக்கிய வாழ்க்கை முறை, வீணாகும் நீரை தோட்டங்களுக்கு சுழற்சி முறையில் பயன்படுத்துவது, குடிநீர் சுத்திகரிப்பு, சுற்றுப்புறம் மாசுபடுதலைத் தடுப்பது, மழை நீர் சேகரிப்பு, ஆடைகளில் இயற்கை சாயம் பயன்படுத்துவது

உள்ளிட்ட பல இயற்கை சார்ந்த விஷயங்கள் இக்கண்காட்சியில் விளக்கப்படும். காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இயற்கை விளை பொருள்களில் தயாரிக்கப்படும் எளிய வகை உணவுகள் இக்கண்காட்சியில் இடம்பெறும்.

nature
பெங்களூரில் 7 முறை வெற்றிகரமாக நடத்தப்பட்ட இக்கண்காட்சி இப்போது முதல் முறையாக சென்னையில் நடத்தப்பட உள்ளது. வணிக நோக்கமின்றி ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்வதே இதன் நோக்கமாகும். உரமின்றி இயற்கை வேளாண் முறையில் தயாரிக்கப்படும் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளன

Leave a Reply