செண்பகத்தோப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. மேற்கே அமைந்துள்ள ஒரு காட்டு பகுதி. செண்பகத்தோப்பு செல்வது மலையேற்றம் செய்வதை விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இரண்டு சக்கர அல்லது வாகனம் அல்லது மிதிவண்டி மூலம் இவ்விடம் வரலாம். காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையின்கிழக்குச்சரிவுகளில் காணப்படுகின்றன. மலையின்மொத்த நிலப்பரப்பில் 6.3% (சதவீதம்)மட்டுமே காடுகள் உள்ளது. அரிய தாவரங்கள் மற்றும் விலங்கின வகைகள் மலைச்சரிவுகளில் இணைந்து காணப்படுகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் செண்பகத்தோப்பில் 1989 ஆம் ஆண்டு, 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு வனவிலங்கு சரணாலயம் நிறுவப்பட்டது. இந்த சரணாலயத்தின் தென்மேற்குப் பகுதியில் ‘பெரியார் புலிகள் காப்புக்காடுகள் சரணாலயம்’ மற்றும் வடமேற்குப் பகுதியில் ‘மேகமலை காப்புக்காடுகள்’ அமைந்துள்ளன.
இந்த இடத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 100மீ (மீட்டர்) முதல் 2010மீ (மீட்டர்) வரை வேறுபடுகிறது. இந்த சரணாலயம் அழிந்து வரும் இனமாகிய சாம்பல் நிற அணில்களுக்கு உள்ளன…

நன்றி 🙏🙏🙏🙏
Credit: ஜெகதா பன்னீர்செல்வம்

Leave a Reply