சுப்ரமணிய சுவாமி ஜல்லிக்கட்டு குறித்து பேசியதன் சுருக்கம்..

டாக்டர் சுப்ரமணிய சுவாமி அவர்கள் இன்று கலிஃபோர்னியாவின் மில்பிடாஸ் நகரில் 400 பேர்களுக்கும் மேலானோர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் இந்திய அமெரிக்க உறவு குறித்து உரையாற்றினார். அதன் இறுதியில் கேட்க்கப் பட்ட கேள்விகளில்

தமிழ் நாடு குறித்தான குறிப்பாக ஜல்லிக்கட்டு குறித்த கேள்விக்கு சுவாமி சொன்ன பதில் கீழே:

1. ஜல்லிக்கட்டில் காளைகளைப் பயன் படுத்தக் கூடாது என்று காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காங்கிரஸ் அரசு காளைகளைச் சேர்த்தது. அதனால் பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் போய் ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியது

2. பி ஜே பி அரசு காளைகளை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கி சட்ட திருத்தம் செய்தது மேலும் ஜல்லிக்கட்டை அனுமதித்து திருத்தம் கொண்டு வந்தது

3. பீட்டா அதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தடை வாங்கியது. சுப்ரீம் கோர்ட் அந்த திருத்தங்களுக்கும் தடை நீக்கத்திற்கும் தடை விதித்து வழக்கை விசாரித்து வருகிறது

4. இந்த நிலையில் பா ஜ க கட்சி ஜல்லிக்கட்டை எப்படியாவது நடத்த முயல்கிறது. ஆனால் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் நான் ஆஜராகி எனது ஆணித்தரமான வாதங்களை வைத்துள்ளேன்

5. விலங்களை சாப்பாட்டுக்காகக் கொல்வது சரி அதையும் ஜல்லிக்கட்டையும் ஒன்றாக நாங்கள் கருத முடியாது என்று சுப்ரீம் கோர்ட் ஜட்ஜுகள் சொன்னார்கள். நான் அதை மறுத்து அப்படியானால் ஹலால் முறைப்படி கொல்வதை மட்டும் எப்படி அனுமதிக்கிறீர்கள் என்று பதில் கேள்வி கேட்டேன் அதற்கு ஜட்ஜுகள் வாயடைத்துப் போனார்கள் தீர்ப்பை அப்புறம் சொல்கிறோம் என்று தள்ளி வைத்தார்கள்

6. தீர்ப்பு நிச்சயமாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சாதகமாகவே வரும் என் வாதங்கள் அசைக்க முடியாதவை. அப்படியே மாறி வரும் பட்சத்தில் மத்திய அரசிடம் இனிமேல் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாத பட்சத்தில் சட்ட திருத்தம் செய்யும் திட்டம் உள்ளது. அதை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த பிறகே செய்ய முடியும் செய்வோம் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் அதை நானும் பாஜகவும் ஆதரிக்கிறோம்

7. கோர்ட்டை நம்பி அதன் தீர்ப்பை நம்பி நாங்கள் சென்றுள்ளோம் அதை மீறி நடப்பதை நான் அனுமதிக்க முடியாது என்பதினால் சட்டத்தை மீறுவதை நான் அனுமதிக்கவில்லை ஏனென்றால் நான் கோர்ட்டை மதித்து அங்கு என் வாதங்களை எடுத்து வைத்துள்ளேன் அவர்கள் உத்தரவை நான் சட்டப்படி மட்டுமே சட்ட திருத்தம் மூலமாக மட்டுமே மீற முடியும் நானும் மோடி சர்க்காரும் அதைச் செய்தே தீருவோம்

8. தமிழர்கள் அனைவரையும் நான் பொறுக்கிகள் என்று சொல்லவில்லை. பிரிவினைவாதிகளையும் காழ்ப்பைத் தூண்டுபவர்களையுமே நான் பொறுக்கிகள் என்று அழைக்கிறேன். தமிழர்கள் மிகவும் புத்திசாலிகள். இந்த பே ஏரியாவிலேயே ஏராளமான புத்திசாலித் தமிழர்கள் பெரும் பதவிகளில் இருக்கிறார்கள். நானே சோழ வந்தானைச் சேர்ந்த ஒரு தமிழன் தான். வேறு எந்தவொரு இனத்தையும் விட தமிழர்கள் அதி புத்திசாலிகளே ஆனால் தான் தமிழன் இந்தியன் கிடையாது என்று சொல்லி பிரிவினைவாதம் பேசும் ஆட்களை நான் பொறுக்கிகள் என்றுதான் அழைப்பேன்
இதுதான் ஜல்லிக்கட்டு பற்றி இன்று மாலை சுவாமி பேசியதின் சுருக்கம்

sve sekar முகநூலில் இருந்து

Leave a Reply