சுடுகாடு

​வாழ்பவர் மனதில் தினமும் தோன்றும்

வண்ணங்களற்ற வானவில்..

சாதித்தவனுக்கும் சறுக்கியவனுக்கும்

ஒரே மாதிரி கை தட்டும் உன்னத ரசிகன்.

கடல் மீது நடை பயிலும்

பேதுருவின் கால்கள்.
இயேசு கழுத்து உருத்திராட்சம்

சிவன் சுமந்த சிலுவை.

மண்ணுக்கு உரம் தயாரிக்கும்

மாற்றமில்லா தொழிற்சாலை.
ஒற்றைக்குழிக்குள் உலகை மறைக்கும்

பிரபஞ்ச கருந்துளை.

அன்புக்கு இலக்கணம் சொல்லும்

அரிச்சந்திர அரிச்சுவடி

பூமித்தாய்க்கு  சமபந்தி போஜனம் 

அளிக்கும் சாதீயமற்ற பிணவறை.

நிழல் இல்லா வெளிச்சம்

இருளின் நிழல்.
உணவு பற்றி உத்தரவிடும் அரச வம்ச

மாடுகள் மேயும் பாலைவனம்.

எத்தனையோ தின்று செரித்த உன்னையும்

தின்று செரிக்கும் உலக உணவறை.

தோற்பதற்கு மட்டும் பாடம் நடத்தும்

உலக பொது பல்கலைக்கழகம்.
யெம் யெஸ் வீ யி (a) எழில்விழி.

Leave a Reply