சிறுநீர் கழிவல்ல!

சற்று சிந்திப்போம். சிறுநீரை கழிவு என்பது சரிதானா? எந்த உயிரினமும் தன் கழிவைத் தானே உண்பதில்லை. விலங்குகள் தங்கள் சிறுநீரை பருகுகின்றன. எனவே அவை கழிவாக இருக்க முடியாது.

அறிவியலார் சிறுநீரை பகுத்து ஆராய்ந்து அதிலுள்ள நுண் பொருட்கள் பற்றிய விளக்கங்களைத் தந்துள்ளனர். அதன்படி சிறுநீரில் மனிதனுக்குத் தேவையான பத்தொன்பது தாதுஉப்புக்கள் உள்ளன. மனித ரத்தத்தின் ஒரு பகுதி தாய்ப்பாலாக மாறுகின்றதோ, அதுபோல் ரத்தத்தின் ஒரு பகுதியே சிறுநீர். பால் எவ்வாறு நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட உணவோ, அதுபோல் சிறுநீரும்.

பிறக்குமுன்னரே சிறுநீர் சிகிச்சை!

தாயின் கருவறையில் – பனிக்குடத்தில் – தாயின் வயிற்றில் வளரும் சிசு தன் சிறுநீரைக் கழிக்கிறது. அதில் ஒரு பகுதியைப் பருகுகிறது. இச் சுழற்ச்சி சிசு வளர உதவுகிறது. இதை நவீன மருத்துவம் ஏற்றுக்கொள்கிறது. எனவே பிறக்குமுன்னரே நாம் சிறுநீர் சிகிச்சையை மேற்கொள்கிறோம் என்பது தெளிவு.

சிறுநீரில் நோய் உண்டாக்கும் கிருமிகள்

சிறுநீரில் நோய் உண்டாக்கும் கிருமிகள் உள்ளதால், அது நோய்நொடிகளைத் தோற்றுவிக்கும் என்று நிறையப்பேர் கருதுகின்றனர். இது தவறான கருத்து என்பதை சுய சிறு நீர் சிகிச்சை எனும் ஆங்கில நூலில் கூறப்பட்டுள்ள விளக்கம் தெளிவாக்குகிறது. (குறிப்பு 4).

தொண்ணூறு சதவிகிதத்தினரின் சிறுநீரில் எந்த விதக் கிருமியும் இருப்பதில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு.

மருத்துவர்களும் இதை ஏற்றுக் கொள்கின்றனர்.

மீதியுள்ள பத்து சதவிகிதத்தினரின் சிறுநீரில் நுண்ணுயிர்கள் இருக்கிறது. அத்தகைய சிறுநீரைப் பருகினாலும் கெடுதல் நேராது. சொல்லப்போனால், நமது சுற்றுச்சூழலில், நாம் சுவாசிக்கும் காற்றில், நாம் உண்ணும் உணவில், நாம் பருகும் நீரில் நிறைய நுண்ணுயிர்கள் உள்ளன. நமது உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலால் இவற்றால் எந்தக் கெடுதலும் நேர்வதில்லை.

மேலும் நுண்ணுயிர்களால் நோய்கள் ஏற்படுகின்றன என்பதே சர்ச்சைக்குரிய ஒன்று. நோய் உண்டாக்குவதாகக் கூறப்படும் நுண்ணுயிர்கள் நம்மைச் சுற்றியும், நமது எச்சளிலும், நமது உடலின் பல பகுதிகளிலும் எப்போதுமே இருக்கின்றன. ஆனால் அவற்றால் நாம் அனைவரும் நோய் வாய்ப்படுவதில்லை. எதிருயிர்களைப் பயன்படுத்தாத ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் உனானி மருந்துகள் நோய்களைக் குணப்படுத்துகின்றன. அதேபோல் இயற்கை மருத்துவம், அக்குப்ரஷர், அக்குப்பஞ்சர், காந்த சிகிச்சை போன்றவற்றில் மொத்தமாகக் கிருமிகளை அழித்து நோயைக் குணப்படுத்துதல் என்ற கோட்பாடே கிடையாது. இருப்பினும், அவை பல நோய்களைக் குணப்படுத்துகின்றன.

பாலுறவு நோய்கள், சிறுநீர்ப் பாதை நோய்கள் போன்ற நோய்களால் பாதிக்கப்படவர்களின் சிறுநீரில் நிச்சயமாக நிறைய நுண்ணுயிர்கள் உள்ளன. ஆனால் இந்த நோய்களும் கூட தன் சிறுநீரைப் பருகுவதால் குணமடைகின்றன.”

சிறுநீரில் என்னென்ன இருக்கிறது?

டாக்டர் ஃபரோன் எழுதிய “பயோகெமிஸ்ட்ரி : அறிமுகம்” என்ற நூலில் சில ஆராய்ச்சிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அதன்படி, 100 மில்லி லிட்டர் சிறுநீரில் உள்ள பொருட்களும், அவற்றில் அளவும்:

1. யூரியா நைட்ரஜன் 682.00 மில்லிகிராம்
2. யூரியா 1459.00 மில்லிகிராம்
3. கிரியேட்டினின் நைட்ரஜன் 36.00 மில்லிகிராம்
4. கிரியேட்டினின் 97.20 மில்லிகிராம்
5. யூரிக் அசிட் நைட்ரஜன் 12.30 மில்லிகிராம்
6. யூரிக் அமிலம் 36.90 மில்லிகிராம்
7. அமினோ நைட்ரஜன் 9.70 மில்லிகிராம்
8. அம்மோனியா நைட்ரஜன் 57.00 மில்லிகிராம்
9. சோடியம் ௨௧௨.00 மில்லிகிராம்
10. பொட்டாசியம் 137.00 மில்லிகிராம்
11. கால்சியம் 19.50 மில்லிகிராம்
12. மெக்னீசியம் 11.30 மில்லிகிராம்
13. க்ளோரைடு 314.00
14. மொத்த ஸல் ஃபேட் 91.00 மில்லிகிராம்
15. இனார்கானிக் ஸல் ஃபேட் 83.00 மில்லிகிராம்
16. இனார்கானிக் பாஸ் ஃபேட் 127.00 மில்லிகிராம்
17. N/10 அமிலம் 27.80 மில்லிகிராம்

மேலே கூறியவை தவிர பல என்ஸைம்களும், ஹார்மோன்களும் சிறுநீரில் உள்ளன. அவை:

என்ஸைம்கள் (Enzymes) :

1. அமைலேஸ் (Amylase (diastase)
2. லாக்டிக் டிஹைட்ரோஜினேஸ் (Lactic dehydrogenase – LDH)
3. லூசின் அமினோபெப்டைடேஸ் (Lucine amino-peptidase – LAP)
4. யூரோகைனேஸ் (Urokinase)

ஹார்மோன்ஸ் (Hormones):

1. கேட்டகோல் அமைன்ஸ் (Catachol amines)
2. ஹைட்ராக்ஸி ஸ்டீராய்ட்ஸ் (Hydroxy-steroids)
3. 17-கேடோ ஸ்டீராய்ட்ஸ் (17-Catosteroids)
4. எரித்ரோபாய்டீன் (Erithropoitine)
5. அடினைலேட் சைக்லேஸ் (Adenylate cyclase)
6. ப்ரோஸ்டோக்லாண்டின்ஸ் (Prostoglandins)
7. செக்ஸ் ஹார்மோன்ஸ் (Sex Hormones)

மற்றவை:

1. செம்பு (Copper)
2. யூரோபிளிநோஜென் (Urobilinogen)

Leave a Reply