‘சின்னம்மா’ என்ற பன்னீர்..!

‘சின்னம்மா’ என்ற பன்னீர்..! சரிந்து விழுந்த பன்னீர் இமேஜ்..! காசேதான் கடவுளடா..?!

வைகோ ஆரம்பித்து சரத்குமார் வரை சசியை சின்னம்மா..சின்னம்மா என்று கொஞ்சி கூத்தாடிய போது முதல்வர் பன்னீர் மட்டும் அப்படிக் கூறவில்லை.

ஆகா,ஓகோ என்று புகழ்ந்து தள்ளின மீடியாக்கள். மக்கள் இவர் தான் ஆண்மகன் என்று புளகாங்கிதம் அடைந்தனர். இளைஞர்கள் இவர் தான் தங்கள் கனவு நாயகன் என்று கொண்டாடினர்.

சசிகலா டீமிற்கு சரியான ஆப்பு வைப்பார் என்று சமூகவலைத்தளங்கள் போற்றின.

அனால், இன்று காலை எந்த சத்தமும் இல்லாமல் சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கிவிட்டு சின்னம்மா சசி என்று திருவாய் மலர்ந்து மொத்த பேரையும் கெடுத்துக் கொண்டார்.

எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்று மக்கள் பொங்கித் தீர்க்கின்றனர். இடையில் என்ன பேரங்கள், கட்டாயங்கள்., அழுத்தங்கள் ஏற்பட்டதோ தெரியவில்லை..

பாவம் பன்னீர்..அவரும் அரசியல் வாதி தானே..!?

liveday

Leave a Reply