சம்மங்கி

சம்மங்கி சாகுபடியில் ராமசாமி என்ற விவசாயின் அனுபவம்
தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் சம்மங்கி சாகுபடி சாதாமுறையில் தண்ணீர் பாய்ச்சுவதை விட சொட்டுநீர் பாசனம் சிறந்தது என்று நினைத்து சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி வந்தேன். தற்பொழுது தெளிப்பு நீர் பாசனம் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார்கள் அவற்றை பயன்படுத்தி பார்க்கலாம் என்று நினைத்து 50 சென்டு நிலத்தில் திரும்பவும் சம்மங்கி சாகுபடி செய்து தெளிப்பு நீர் பாசன முறையில் 60 தெளிப்பான்கள் அமைத்து பயன்படுத்தினேன்.
இதில் என்ன ஒரு நன்மை என்றால் தண்ணீர் மழைபோல மேலிருந்து கொட்டுவதால் பூச்சி தாக்குதல் இருந்தது குறைந்து விட்டது. வயலை கவனித்து பார்த்த பொழுது இதழ்களில் பூச்சியின் முட்டை குவியல் இருந்தது தண்ணீர் பட்டவுடன் அவை கீழே விழுந்து நசுங்கிய நிலையில் கிடந்தது.
அதன்பிறகு பரவலாக வயலில் இதேபோல இருப்பதை பார்த்து இது ஒரு வகையில் பூச்சிகள் அதிகம் தாக்காமல் தடுக்க வழி முறைபோல எனக்கு தெரிந்தது அதன் பிறகு கொஞ்சநாள் கழித்து பார்த்தால் பூ வெண்மை நிறத்தில் மிகவும் பெரியதாகவும்இ கொஞ்சம் கூடுதல் மகசூலும் தந்தது. இவற்றை பார்க்கும் போதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
பரவாயில்லை தெளிப்பு நீர் பாசன முறை அமைத்தது நல்லது என்று எனக்கு தெரிந்தது சொட்டு நீர் பாசனம் அமைத்து இருந்தபொழுது பூ மஞ்சள் நிறம் கலந்த வெண்மை நிறத்தில் இருந்தது மற்ற விவசாயிகள் சொட்டு நீர் பாசத்தை விட தெளிப்பு நீர் பாசனமுறையை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் செலவும் குறைவு என்று தன் அனுபவத்தை எடுத்து கூறினார்

Leave a Reply