சந்தன மரங்களை வளர்க்கலாமா

தேக்கு மரக்கன்றுகளை தோட்டங்களிலும், வீடுகளிலும் வளர்ப்பது போல சந்தன மரங்களையும் வளர்க்கலாமா?”

”வீடுகளிலும், தோட்டங் களிலும் சந்தன மரம் வளர்க்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. சந்தன மரம் இரண்டு அடி வளர்ந்த நிலையில், அதாவது மேற்கொண்டு நன்கு வளரும் அறிகுறி தெரியும் நிலையில் சம்பந்தபட்ட ஊரின் கிராம நிர்வாக அலுவலரிடம் சந்தன மரம் வளர்ப்பது பற்றித் தகவல் தெரிவித்து, நில ‘அடங்கல்’ குறிப்பில் அதை பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் மறுபதிவு செய்து வரவேண்டும். அப்படி செய்யத் தவறினால், மரம் வெட்டும்போது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

Leave a Reply